இந்த வீக்கெண்ட் பிக்பாஸை தொகுத்து வழங்கப் போறது நடிகை சமந்தாவாமே.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார வீக்கெண்ட் எபிசோடை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியம் 4வது சீசனை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் நாகார்ஜூனாதான் இந்த பிக்பாஸ் சீசன் 4யும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சுவாரசியம்

சுவாரசியம்

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை 45 நாட்களை கடந்துள்ளது. 6 போட்டியாளர்கள் எவிக்ட்டான நிலையில் ஒருவர் இடையிலேயே வெளியேறி விட்டார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படு சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் தெலுங்கு.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார இறுதி நாட்களான 24 மற்றும் 25ஆம் தேதிகளான சனி மற்றும் ஞாயிற்று ஆகிய இரண்டு நாட்களும், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகை சமந்தா தொகுத்து வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உறுதிப்படுத்தவில்லை

உறுதிப்படுத்தவில்லை

24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் நடிகர் நாகார்ஜூனா, படப்பிடிப்புக்காக வெளியூர் செல்ல இருப்பதால் வரும் வீக்கெண்ட் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை.

ஸ்பெயின் சென்றார்

ஸ்பெயின் சென்றார்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் இதுபோன்று நாகார்ஜூனா திடீரென இடையில் விடுப்பு எடுத்தார். அதாவது தனது 60வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் ஸ்பெயின் சென்றிருந்தார் நாகார்ஜூனா.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

அப்போது சில வாரங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாகுபலி புகழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இம்முறையும் நடிகை ரம்யா கிருஷ்ணனை நிகழ்ச்சிக் குழு அணுகியதாம்.

நன்கு அறிந்தவர்

நன்கு அறிந்தவர்

ஆனால் நாக பைரவி நிகழ்ச்சிக்கான கமிட்மெண்டால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில்தான் சமந்தா தெலுங்கு மற்றும் தமிழில் நன்கு அறிந்தவர் என்பதால் அவரை நிகழ்ச்சிக் குழு அணுகியுள்ளது. மேலும் அவரது புகழ் நிகழ்ச்சிக்கு மேலும் மதிப்பு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X