உங்கள் வாழ்க்கையில் சிறந்தது மட்டுமே கிடைக்கட்டும்... எக்ஸ் கணவரின் கஸினுக்கு வாழ்த்து கூறிய சமந்தா!
சென்னை: உங்கள் வாழ்க்கையில் சிறந்தது மட்டுமே கிடைக்கட்டும் என்று நடிகர் ராணாவுக்கு நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஹாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார் சமந்தா.
இதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். நடிகை சமந்தா கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடிகர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.

ராணா பிறந்தநாள்
அவரது பிரிவு குறித்து பல வதந்திகள் எழுந்தபோதும் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் நடிகை சமந்தா நாக சைதன்யாவின் மாமன் மகனான நடிகர் ராணா டகுபதிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ராணா கடந்த 14ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடினார்.

சிறப்பானது மட்டும் கிடைக்கட்டும்
அவரது பிறந்தநாளுக்கு நடிகை சமந்தா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டா பதிவில் 'பிறந்தநாள் வாழ்த்துகள் ராணா. உங்களுக்கு வாழ்க்கையில் சிறப்பானவை மட்டுமே கிடைக்கட்டும். உடல் பலமும், நல்ல உள்ளமும் கொண்ட கடவுளுக்கு விருப்பமான மனிதர் நீங்கள்' என வாழ்த்தியுள்ளார்.

குடும்பத்தினருடன் தொடர்பு
நடிகர் ராணா டக்குபதி, நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் மாமா மகன் ஆவார். அவரது பிறந்த நாளுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூறியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இன்னும் முன்னாள் கணவரின் குடும்பத்தினருடன் தொடர்பில்தான் இருக்கிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Recommended Video

பெங்களூரு நாட்கள்
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், அண்மையில் நாக சைதன்யாவின் பிறந்த நாளுக்கு நடிகை சமந்தா வாழ்த்து கூற வில்லை. ஆனால் அவரது உறவினருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளாரே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் ராணா ஏற்கனவே சமந்தாவுடன் இணைந்து பாஸ்கர் இயக்கிய 'பெங்களூர் நாட்கள்' திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











