Samantha: 6 மாதம் ஓய்வு... கோயில் கோயிலாக ஏறி இறங்கும் சமந்தா... எல்லாம் அதுக்காக தான்!

வேலூர்: கோலிவுட், டோலிவுட் என கலக்கி வந்த சமந்தா தற்போது பான் இந்தியா நடிகையாக மிரட்டி வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ள அவர், 6 மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் முடிவில் உள்ளார்.

மயோசிடிஸ் பாதிப்பால் சிகிச்சை எடுத்துவந்த சமந்தா, மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப முயற்சித்து வருகிறாராம்.

இந்நிலையில், கோயில் கோயிலாக சென்றுவரும் சமந்தா, தற்போது வேலூர் அருகேயுள்ள பொற்கோயிலில் வழிபட்டுள்ளார்.

 Actress Samantha worshiped at Sripuram Golden Temple near Vellore

கோயில் கோயிலாக ஏறி இறங்கும் சமந்தா:தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சினிமா மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் பிஸியாக நடித்து வரும் சமந்தா, கவர்ச்சிக்கும் அன்லிமிடெட் சிக்னல் கொடுத்துவிட்டார். நாக சைதன்யாவை பிரிந்த பின்னர் இன்னும் அதிரடியான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

அதேநேரம் சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான சாகுந்தலம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால், தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தை அதிகமாக நம்பியுள்ளார். முழுக்க முழுக்க ரொமான்டிக் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ரொம்பவே நெருக்கமாக நடித்துள்ளார் சமந்தா.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தன. அதனால் விரைவில் ட்ரெய்லரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மயோசிடிஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து 6 மாதங்கள் வரை ஓய்வெடுக்கும் முடிவில் உள்ளாராம். அதேநேரம் அவ்வப்போது கோயில்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சமந்தா.

 Actress Samantha worshiped at Sripuram Golden Temple near Vellore

இந்நிலையில் தற்போது வேலூர் அருகேயுள்ள ஸ்ரீபுரம் பொற்கோயிலில் வழிபாடு செய்துள்ளார் சமந்தா. ஸ்ரீபுரம் பொற்கோவில் சென்ற அவர், சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள மத குருமார்களிடம் ஆசி பெற்றுள்ளார். அதன் பிறகு அங்குள்ள சுவர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்துள்ளார் சமந்தா. அவருக்கு கோயில் நிர்வாக ஊழியர்கள் நல்ல முறையில் உபசரித்து சிறப்பித்துள்ளனர்.

தொடர்ச்சியாக தான் நடிக்கும் படங்கள் தோல்வியடைந்து வருவதால் ரொம்பவே மன அழுத்தத்தில் இருக்கிறாராம். அதுமட்டும் இல்லாமல் பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டதால் மன அமைதி தேடி கோயில் கோயிலாக சென்று வருகிறாராம் சமந்தா. இன்னொரு பக்கம் மயோசிடிஸ் பிரச்சினையில் இருந்தும் விரைவில் குணமாக வேண்டும் என்பதே சமந்தாவின் வேண்டுதலாக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X