வவ்வால் போல தலைகீழா தொங்கிய சமந்தா…வெளியான புகைப்படத்தால் பதறிய ரசிகர்கள் !

சென்னை : உடலை எப்போதும ஃபிட்டாக வைத்து இருக்கும் சமந்தா, தலைகீழாக தொங்கியபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் சமந்தா.

அடுத்ததாக அதர்வா நடித்த பாணா காத்தாடி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம், 2017 கோவாவில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. தற்போது இவர்கள் ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளனர்.

படங்களில் நடிக்கிறார்

படங்களில் நடிக்கிறார்

திருமணத்திற்கு பின்பும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்தார். அந்த படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தில் அழகாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

விஜய்சேதுபதியுடன்

விஜய்சேதுபதியுடன்

தொடர்ந்து தெலுங்கு படங்களில கவனம் செலுத்தி வரும் சமந்தா, தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.

சகுந்தலையாக

சகுந்தலையாக

மேலும், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகி வருகிறது இந்த படத்தில் சகுந்தலையாக நடிகை கமந்தா நடிக்கிறார். இந்த படம் நேரடியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. குணசேகர் இப்படத்தை இயக்குகிறார் இவர், அனுஷ்காவை வைத்து ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர் ஆவார்.

Recommended Video

Kathu vaakula rendu kaadhal: விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன் - வீடியோ
தலைகீழாக தொங்கி

தலைகீழாக தொங்கி

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சமந்தா தற்போது அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய படி பயிற்சி செய்த புகைப்படத்தை இணயைத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X