காலையிலேயே ட்ரெண்டான சமந்தா.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கவர்ச்சிக் குயின்!

சென்னை :நடிகை சமந்தா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

Recommended Video

Naga Chaitanya Love | மீண்டும் காதலில் விழுகிறார் நாக சைதன்யா..

ரசிகர்கள் இவரை அதிகமாக கொண்டாடி வருகின்றனர். தென்னிந்திய அளவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தன்னுடைய சொந்த வாழ்க்கை தன்னுடைய கேரியரை எப்போதும் பாதிக்காத வகையில் ஆரம்பத்தில் இருந்தே இவர் கவனமாக செயல்பட்டு வருகிறார்.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தற்போது யசோதா, குஷி படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் யசோதா படம் 4 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார் சமந்தா.

அக்ஷயுடன் படம்

அக்ஷயுடன் படம்

பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து காபி வித் கரண் சீசன் 6ல் சமீபத்தில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருவரின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக காணப்பட்டது. ஊ சொல்றியா மாமா பாடலுக்கு இவர்கள் ஆடிய நடனம் வைரலானது.

ஏராளமான பாலிவுட் ரசிகர்கள்

ஏராளமான பாலிவுட் ரசிகர்கள்


சமந்தாவிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது தி பேமிலி மேன் 2 சீரிஸ். இந்தத் தொடர்தான் இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும் காரணமாக கூறப்படுகிறது. நாக சைத்தன்யாவுடனான விவாகரத்து அறிவிப்பிற்கு இந்தப் படம்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகின.

ட்விட்டரில் ட்ரெண்டான சமந்தா

ட்விட்டரில் ட்ரெண்டான சமந்தா

தொடர்ந்து தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சமந்தா, எப்போதுமே ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாகவே உள்ளார். இதை அவ்வப்போது அவரது நடிகர்கள் நிரூபித்து வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே அவர் ட்விட்டரில் திடீரென ட்ரெண்டானார். சில தினங்களுக்கு முன்பும் இதேபோல அவர் ட்ரெண்டான நிலையில் தற்போது மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.

புகைப்படங்களை ஷேர் செய்த ரசிகர்கள்

புகைப்படங்களை ஷேர் செய்த ரசிகர்கள்

அவரது பல படங்களை ஷேர் செய்து தொடர்ந்து சமந்தா ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கினர். அவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாராவை ஓரம்கட்டி, தன்னுடைய கதீஜா கேரக்டர்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சமந்தா.

யசோதா படம்

யசோதா படம்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ள போதிலும் அவை குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. குறிப்பாக இவரது நடிப்பில் அடுத்ததாக யசோதா படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X