Samantha: கவிதையாய் போஸ் கொடுத்த சமந்தா.. அடுத்தடுத்த போட்டோஷுட்களால் ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை: நடிகை சமந்தா 20 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக நடைபோட்டு வருகிறார்.
இந்தியிலும் அடுத்தடுத்த வெப் தொடர்களில் சமந்தா தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள அரியவகை நோய் பாதிப்பு காரணமாக சினிமாவில் இருந்து 6 மாதங்களுக்கு விலகியுள்ளார் சமந்தா.

நடிகை சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருபவர். சமீபத்தில் பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்திருந்தார். இதன்மூலம் இவருக்கு பாலிவுட்டிலும் சிறப்பான கவனம் கிடைத்துள்ளது. இதன்மூலம் சிட்டாடல் இந்திய வெர்ஷனில் நடித்துள்ளார் சமந்தா. இதில் இவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார். இந்த தொடரை ராஜ் மற்றும் டி இயக்கியுள்ளனர்.
வரவேற்பை பெற்ற குஷி படம்: சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து சமந்தா நடிப்பில் குஷி படம் வெளியானது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அரியவகை நோய் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக 6 மாத காலம் சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்வதாக சமந்தா அறிவித்திருந்தார்.
சிகிச்சைக்காக இடைவெளி: இதையடுத்து அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்ட சமந்தா, அவ்வப்போது தனது வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த போட்டோஷுட்கள்: இந்நிலையில் சமந்தா தான் நடத்திவரும சாகி என்ற க்ளாத்திங் பிராண்டை பிரமோட் செய்யும் வகையில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி விதவிதமான உடைகளை அணிந்து தொடர்ந்து போட்டோஷுட் நடத்தி வருகிறார். முன்னதாக ட்ரெடிஷனல் லுக்கில் சிவப்பு நிற புடவையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டிருந்த சமந்தா, தற்போது பிங்க் நிற அசத்தலான புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் அசத்தலான போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மீண்டும் பிசியான சமந்தா: ஆறு மாத கால ஓய்வு எடுக்கவுள்ளதாக முன்னதாக சமந்தா கூறிய நிலையில், அதற்குள்ளாகவே தன்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிசியாகியுள்ளார். வழக்கமான ஜிம் ஒர்க்அவுட் உள்ளிட்ட வேலைகளையும் செய்யத் துவங்கியுள்ளார். விரைவில் இவரது சிட்டாடல் வெப் தொடர் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக சென்னை ஸ்டோரிஸ் என்ற திரைப்படத்தின்மூலம் ஹாலிவுட்டிலும் சமந்தா அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











