குழந்தை பிறந்து 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள இந்த நடிகை செஞ்ச வேலையை பாத்தீங்களா?

Recommended Video

குழந்தை பிறந்து 2 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள இந்த நடிகை செஞ்ச வேலையை பாத்தீங்களா?-வீடியோ

மும்பை: நடிகை சமீரா ரெட்டி தனது 2 மாத குழந்தையும் 6300 அடி உயரம் கொண்ட மலையில் ஏறியிருப்பது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2013 அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து படத்தில் நடிப்பதை நிறுத்திய அவருக்கு 2015 ஆம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் சமீரா ரெட்டி.

குழந்தையுடன் மலையேற்றம்

குழந்தையுடன் மலையேற்றம்

அவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரண்டு மாத பெண் குழந்தையுடன் மலையேறியிருக்கிறார் சமீரா.

6300 அடி உயரம்

6300 அடி உயரம்

கர்நாடகாவில் உள்ள உயரமான சிகரம் என அழைக்கப்படும் முல்லயநாகிரி சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 6300 அடி உயரம் கொண்ட இந்த சிகரத்தில் தனது இரண்டு மாத குழந்தையையும் சுமந்தபடி ஏறியிருக்கிறார் சமீரா.

பாதியில் மூச்சு திணறல்

பாதியில் மூச்சு திணறல்

இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சமீரா, இந்த மலை உச்சியில் தனது மகள் நைராவுடன் ஏறியதாகவும் மலை உச்சிக்கு செல்லும் முன்பாக பாதி வழியிலேயே மூச்சு திணறலால் நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

புதிய தாய்மார்கள்

இந்த வீடியோவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என கூறியுள்ளார். குறிப்பாக புதிய தாய் மார்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். இந்த மலை ஏற்றத்தின் போது, தனது குழந்தைக்கு தேவைப்படும் இடத்தில் குழந்தைக்கு பாலூட்டியதாகவும் சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மகனுடம் செலவழிப்பு

மகனுடம் செலவழிப்பு

மலையேற்றத்திற்கு முன்பாக தனது மகன், ஹான்ஸ் வர்தேவுடன் எடுத்த செல்பியையும் சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையில் தனது மகனுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X