வில் ஸ்மித்துக்கு வக்காலத்து வாங்கும் சமீரா ரெட்டி.. நானும் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டேன்!

சென்னை : ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார் நடிகர் வில் ஸ்மித். இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

Recommended Video

Will Smith Chris Rockஐ Oscar Stage-ல் அறைந்தது ஏன்? | Filmibeat Tamil

வில் ஸ்மித் செய்தது சரியா ? தவறா ? என பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகின்றனர்.

நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித்துக்கு வக்காலத்து வாங்கும் வகையில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சில நாட்களுக்கு முன் கோலாகலமாக நடந்தது. இதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். இதனால் ஆஸ்கர் அரங்கத்தில் இருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக சிரித்தனர்.

கன்னத்தில் அடித்தார்

கன்னத்தில் அடித்தார்

இதையடுத்து, மேடைக்கு சென்ற வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டுவிட்டு, மீண்டும் தனது மனைவியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, என் மனைவியின் பெயரை உன் வாயால் மீண்டும் சொல்லாதே என ஆக்ரோஷமாக கத்தினார். இதையடுத்து, ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற அவர், கண்ணீர் மல்க தன் மனைவி, அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரின் உடல்நிலை குறித்து பேசியதால் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் என்று அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டார்.

அலோபீசியா நோய் என்றால் என்ன

அலோபீசியா நோய் என்றால் என்ன

வில் ஸ்மித், ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் உலகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், அனைவரும் அலோபீசியா நோய் என்றால் என்ன என்று இணையத்தில் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இதுவரை ராக் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை, ஒருவேளை அவர் புகார் கொடுத்தால் வில் ஸ்மித் கைது செய்யப்படுவார்.

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

இந்நிலையில், வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டி, வில் ஸ்மித்துக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனை உண்டு. 2016ம் ஆண்டு அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டேன். அது கூந்தல் செல்களை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் என் பின் தலையில் இரண்டு இன்ச் வழுக்கை ஏற்பட்டது.

மனதளவில் பாதிப்பை உண்டாக்கும்

தீவிர சிகிச்சைக்கு பின் கார்டிகோ ஸ்டீராய்டு ஊசி மூலம் உதிர்ந்த இடத்தில் மெதுவாக முடி வளர தொடங்கியது. ஆனால், சிலருக்கும் மீண்டும் முடி வளர்வது இல்லை என்றார். அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் மனதளவில் மீளமுடியாத பெரும் துயரத்தில் இருப்பார்கள். அவர்களை பொது இடத்தில் கிண்டல் செய்தால் அது அவர்களை காயப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X