ஆடிஷனின் போது மார்பை பெரியதாக்க சொன்னார்கள்.. வேதனையை பகிர்ந்த சூர்யா பட நடிகை!

சென்னை : ஆடிஷனின் போது என் மார்பு வசீகரமாக இல்லை என்பதால், மார்பை பெரியதாக்க சொன்னார்கள் என்று சூர்யா பட நடிகை சமீரா ரெட்டி தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... நீருக்குள் மூழ்கிடும் தாமரை என்ற பாடலின் மூலம் மனதிற்குள் நுழைந்தவர் தான் சமீரா ரெட்டி. கௌதம் மேனனின் படம் என்றாலே, அழகான சேலையில் வளைய வரும் கதாநாயகிகளின் வரிசையில் இவரும் ஒருவராக இணைந்தார்.

மென்மையான காதல் திரைப்படமான வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி

நடிகை சமீரா ரெட்டி, வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெடி, அசல், வேட்டை போன்ற படங்களில் நடித்தார். அதன் பின் தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்தார். அதன் பின் 2014ம் ஆண்டு, மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட்டார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை சமீரா ரெட்டி, அவர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் இவர் நடிக்காவிட்டாலும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக நேரலையில் வந்து அவர்களின் கேள்விக்கு அழகாக பதில் அளித்து வருகிறார்.

மார்பு கவர்ச்சியாக இல்லை

மார்பு கவர்ச்சியாக இல்லை

அண்மையில் நேரலையில் பேசிய சமீரா ரெட்டி, ஆடிஷனின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசி உள்ளார். அதில், பாலிவுட் திரைப்படத்தின் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அப்போது பாலிவுட் இயக்குநர் ஒருவர், என்னை ஏறஇறங்க பார்த்துவிட்டு, உங்கள் மார்பு கவர்ச்சியாக இல்லை. இதனை அழகாகவும், பெரியதாகவும் காட்ட அறுவை சிகிச்சை செய்யும்படி கூறினார்.

மோசமான அனுபவம்

மோசமான அனுபவம்

நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை, ஆனால், இயற்கையான முறையில் மார்பை பெரியதாக்க சில முயற்சிகளை செய்தேன். இருப்பினும் அறுவை சிகிச்சை செய்ய சொல்லி அந்த இயக்குநர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதில் ஈடுபாடு இல்லாததால், நான் மறுத்துவிட்டேன், என பாலிவுட்டில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

செயற்கையான பேட் பயன்படுத்தினேன்

செயற்கையான பேட் பயன்படுத்தினேன்

மேலும் மார்பகம் பெரியதாக தெரியவேண்டும் என்பதற்கான செயற்கையான பேடுகளை நான் பயன்படுத்தி வந்தேன். பல நேரம் இது தேவையா? இது வழக்கமானது தானே? நான் ஒரு நடிகை என்பதற்காக மூக்கு, வாய்,மார்பு எல்லாம் அழகாகத்தான் இருக்க வேண்டுமா என பல முறை நினைத்து இருக்கிறேன் என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X