இதை சாப்பிடுங்க… இதை சாப்பிடாதீங்க… சமீரா ரெட்டியின் டிப்ஸ்!
மும்பை : சமீரா ரெட்டி,கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வர எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை கூறியுள்ளார்.
சமீபத்தில் கொரோனா தொற்றால் பதிக்கப்பட்ட அவர் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்பதை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

புகழின் உச்சியில்
இந்தியில் அறிமுகமாகிக் கலக்கிக் கொண்டிருந்த நடிகை சமீரா ரெட்டி தென்னிந்தியாவிற்கு நரசிம்ஹுடு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமாகி புகழின் உச்சிக்கு சென்றார்.

படங்களில் நடிக்கவில்லை
வாரணம் ஆயிரம் , அசல்,வெடி,நடுநிசி நாய்கள்,வேட்டை என தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் மிகக் குறைவே என்றாலும் அனைவராலும் பாரபட்சம் பார்க்காமல் ரசிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

உறுதியானது
மீண்டும் படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க ஒட்டுமொத்தமாக சினிமாவிற்கும் முழுக்கு போட்டுவிட்டு வீட்டில் குழந்தைகளுடன் செம ஜாலியாக பொழுதைக்கழித்து வருகிறார். சமீபத்தில் இவர், சமீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டாக்டரின் அறிவுரைப்படி வீட்டில் ஒய்வு எடுத்து தற்போது குணமடைந்துள்ளார்.
இதை சாப்பிடாதீங்க
இந்நிலையில் சமீரா ரெட்டி,கொரோனாவிலிருந்து மீண்டு வர எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வீடியோவின் மூலம் கூறியுள்ளார். அதில், தேங்காய் நீர், பேரீச்சம் பழம், ஊறவைத்த பாதாம், திராட்சை மற்றும் நெல்லிக்காய், ஜூஸ்,பழங்களை சாப்பிடுங்கள். பொறித்த வறுத்த உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
Recommended Video

உடற்பயிற்சி
மேலும் தூங்குவதற்கு முன்பு மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள், உணர்ச்சி வசப்படாதீர்கள், உங்கள் உணர்வுகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் கொரோனாவில் இருந்து குணமடைய எனக்கு இந்த வழி முறைதான் எனக்கு மிகவும் உதவியாக இருந்து என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications