நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி !

சென்னை : நடிகை சமீரா ரெட்டி தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 9,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2,61,500 பாதிப்பு

2,61,500 பாதிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் தங்களது உயிரை கொரோனாவிற்கு பலி கொடுத்துள்ளனர்.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 2,884 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,80,726 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அதில், கோவிட் சோதனை மேற்கொண்டதாவும், சோதனையில் கோவிட்19 வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும், நாங்கள்பாதுகாப்பாக இருக்கிறோம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.

பாதுகாப்பாக இருக்கிறோம்

பாதுகாப்பாக இருக்கிறோம்

தற்போது அவர் வீட்டு தனிமையில் இருப்பதாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். சாஸி, சாசு, கடவுளின் கிருபையால், தனியாக பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்போம் என்றும் கூறினார். மேலும், என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருப்பது எனக்கு தெரியும்.நேர்மறையான உறுதிமொழிகளுடன் வலுவாக இருக்க வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருப்போம், பாதுகாப்பாகஇருங்கள் என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமீரா ரெட்டி தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X