கொரோனா லாக்டவுனில்.. சத்தம் போடாமல் 2 வது திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை.. தொழிலதிபரை மணந்தார்!
மும்பை: இந்த லாக்டவுனில் பிரபல நடிகை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடும் சிக்கலில் இருக்கிறது.
இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மருந்து கண்டுபிடிக்கவில்லை
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். பிரபலங்களும் வீடுகளுக்குள் இருக்கிறார்கள்.

லாக்டவுனில் திருமணம்
தேவை என்றால் மட்டுமே வெளியில் வருகின்றனர். இதற்கு சினிமா பிரபலங்களும் விதிவிலக்கல்ல. படப்பிடிப்புகள் இல்லாததால் அவர்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இதற்கிடையே சில நடிகர், நடிகைகள் கொரோனா காரணமாக தங்கள் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனர். சில நடிகர், நடிகைகள் லாக்டவுனில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

நடிகை சமிக்ஷா
நெருங்கிய சொந்தம் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர். நடிகை சமிக்ஷாவும் இந்த லாக்டவுனில் தனது திருமணத்தைச் சத்தம் போடாமல் நடத்தியுள்ளார். இவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, நவ்தீப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்தவர். மேலும், கார்த்திகை, பஞ்சாமிர்தம், முருகா, தீ நகர், மெர்க்குரி பூக்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஷாயல் ஓஸ்வால்
இந்தி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தி டிவி தொடர்களிலும் நடித்துவரும் இவர், பாப் பாடகரும் தொழிலதிபருமான ஷாயல் ஓஸ்வால் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆம் தேதி சிங்கப்பூரில் திருமணம் செய்துகொண்டனர். ஷாய்ல் ஓஸ்வால் தொழிலதிபரும் கூட. சிங்கப்பூர் இந்தோனேஷியாவில் பிசினஸ் செய்துவருகிறார்.

காதலில் விழுந்தார்
இதுபற்றி நடிகை சமீக்ஷா கூறும்போது, ஷாயல் பாடிய ஒரு பாடலின் மியூசிக் வீடியோவில் நான் ஆடினேன். அப்போது அவர் என் புகைப்படத்தைக் கண்டு காதலில் விழுந்ததாகச் சொன்னார். அப்போது அவர் மீது எனக்கு காதல் வரவில்லை. அந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது நட்பாக பழகினோம். பிறகு நெருங்கிவிட்டோம். அவர் எனக்கு கணவரானது, எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

குட்பை சொல்லி விட்டேன்
கடந்த பிப்ரவரி மாதம் தேரே நாள் என்ற இன்னொரு பாடலை படமாக்க சிங்கப்பூர் வந்தோம். பிறகு இங்கேயே செட்டிலாகி விட்டோம். கடந்த 3 ஆம் தேதி எங்கள் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்ள நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இனி நடிக்கப் போவதில்லை. குட்பை சொல்லிவிட்டேன். ஸ்கிரிப்ட், டைரக்ஷன், தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

இரண்டாவது திருமணம்
நடிகை சமீக்ஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஷாயலுக்கும் தனது முதல் மனைவி மூலம் 2 பிள்ளைகள் இருக்கின்றன. இதையடுத்து இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து சினிமா நடிகர், நடிகைகள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











