Muthazhagu Serial: சூட்டிங்கில் சைலண்டான சம்யுக்தா.. பிரச்சினைகள் கொடுத்த பக்குவம்?

சென்னை: நடிகை சம்யுக்தா தற்போது முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து நடிகர் மகேஷும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.

முன்னதாக விஷ்ணுகாந்தை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த சம்யுக்தா, 15 நாட்களிலேயே அவரை பிரிந்துவிட்டார்.

இதையடுத்து இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்படும் வகையில் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர்.

Actress Samyuktha becomes silent in Muthazhagu serial shooting spot

முத்தழகு சூட்டிங் ஸ்பாட்டில் சைலண்டாக மாறிய சம்யுக்தா: சீரியல் நடிகர்களான சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கடந்த 7 மாதங்களாக காதலித்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் சிறப்பான ஜோடியாக பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 15 நாட்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இவர்களின் இந்த பிரிவுக்கு சம்யுக்தாவின் அப்பா தான் காரணம் என்று விஷ்ணுகாந்த் குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து இருவரும் லைவில் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டனர். விஷ்ணுகாந்த் ஒரு காமக் கொடூரன் என்று சம்யுக்தாவும் பலருடன் சம்யுக்தாவிற்கு தொடர்பு உள்ளதாக விஷ்ணுகாந்தும் புகார் தெரிவித்த நிலையில், இவர்களின் இந்த விவகாரத்தை பலரும் விமர்சித்தனர். சமீபத்தில் பாடகி ராஜலட்சுமி கேவலமாக இல்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். தங்களது அந்தரங்கங்களை வெளிப்படுத்திய அவர்களது செய்கை அவர்களுக்கு மனப்பக்குவம் இல்லாததையே காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இவர்கள் இருவரும் விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் இணைந்து நடித்தபோத காதலித்த நிலையில், தங்களது காதலை இன்ஸ்டாகிராம் மூலம் உறுதிப்படுத்தினர். தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக் கொண்ட நிலையில்தான் சில தினங்களிலேயே பிரிந்தனர். எவ்வளவு சீக்கிரத்தில் தங்களது காதலை உறுதி செய்தார்களோ, அவ்வளவு சீக்கிரத்தில் இவர்களின் பிரிவும் காணப்பட்டது மீடியா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சம்யுக்தா முத்தழகு என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடர் இன்னும் சில தினங்களில் 500 எபிசோட்களை தொட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர் குறித்தும் தன்னுடன் லீட் கேரக்டரில் நடித்துவரும் சம்யுக்தா குறித்தும் நடிகர் மனம் திறந்து தன்னுடைய பேட்டியொன்றில் பேசியுள்ளார். தற்போது சம்யுக்தா சூட்டிங்கில் மிகவும் சைலண்டாக மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Actress Samyuktha becomes silent in Muthazhagu serial shooting spot

இந்த சீரியலில் அமுதன் என்ற கேரக்டரில் மகேஷ் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாகத்தான் சம்யுக்தா நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் சீரியலில் மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்து வருவதாக மகேஷ் தெரிவித்துள்ளார். சம்யுக்தாவிற்கு பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும் அதை திரையில் வெளிப்படுத்த மாட்டார் என்றும் இதற்கு அதிகமான மன தைரியம் வேண்டும் என்றும் மகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வகையில் சம்யுக்தா சோர்வாக இருந்து தான் பார்த்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக சம்யுக்தா வேலை செய்து வருவதாகவும் மகேஷ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய பிரச்சினை குறித்து வெளிப்படையாக இன்ஸ்டாகிராம் லைவில் பேசிவந்த சம்யுக்தா, தற்போது அதை நிறுத்தியுள்ளார். இனிமேல் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி தரப் போவதில்லை என்று சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X