அடேங்கப்பா.. இடுப்பா அது.. என்னா ஸ்டிராங்கு.. சம்யுக்தாவின் சாகசம்.. அசந்து போன ரசிகர்கள்!
சென்னை : இடுப்பை வைத்து வித்தியாசமான உடற்பயிற்சி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார் சம்யுக்தா.
Recommended Video
நடிகை சம்யுக்தா ஹெக்டே கோமாளி படத்தின் மூலம் பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்றார்.மேலும் இந்த ஒரு படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தையும் பிடித்தார்.
இவர் அடுத்ததாக நடித்த பப்பி படம் கூட பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பெரிய பாராட்டுகளை பெற்றார்.

பிட்னஸ்
உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உள்ள சம்யுக்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சி அறிவுரைகளையும், உடற்பயிற்ச்சிகளையும் பகிர்ந்து வருகிறார். இடையிடையே பல மாடல் அலங்கார போட்டோசூட்களை செய்து வந்தாலும் முழுநேரமாக உடற்பயிற்சியிலே அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.

சம்யுக்தா இடுப்பைப் பிடித்து
மேலும் சில நேரங்களில் நான் உடற்பயிற்சியில் இப்படியெல்லாம் கடினபட்டு செய்திருக்கிறேன் என்று வேறு மாதிரியான பல ஆச்சரியமூட்டும் உடற்பயிற்சிகளை செய்து அசத்துவார். அப்படி ஒரு வித்தியாசமான ஒரு உடற்பயிற்சி போட்டோவை தற்போது பதிவேற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அப்படியே அந்தரத்தில்
நடிகை சம்யுக்தா உடம்பை வில்லாய் வலைத்து நிற்க அவரின் மேல் மற்றொருவர் இடுப்பை பிடித்த படி தலை கீழாக அந்தரத்தில் நிற்கும் அந்த உடற்பயிற்சியை ஆச்சரிய படும் அளவிற்கு அருமையாக செய்திருக்கிறார் சம்யுக்தா. இதற்கு கேப்ஷனாக உங்க காஃபிய விட ஸ்ட்ராங்கு என்றும், என் இடுப்பு பொய் சொல்லாது என்றும் கூறியுள்ளார்.

ஆச்சரியம்
சம்யுக்தா புரிந்துள்ள இந்த சாதனையை பல ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருகிறார்கள் அதைவிட பலர் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போய் அந்த புகைப்படத்தை வெகுவாக பகிர்ந்து வருகிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறது. சம்யுக்தா கன்னடத்தில் கிர்க் பார்டி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் தமிழில் வாட்ஜ்மேன் படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது சம்யுக்தா பல வெற்றி படங்களை அடுத்து தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருவதாக தெரிகிறது. அடுத்ததாக சம்யுக்தா கன்னடத்தில் தேல் மற்றும் துர்தூ நிர்கமான படங்களில் நடித்து வருகிறார்


Click it and Unblock the Notifications











