தனுஷோட சம்யுக்தா மேனன் நடிக்க விரும்பிய படம்.. வாத்தி ஆடியோ லாஞ்சில் சுவாரஸ்யம்!

சென்னை : நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். படத்தின் பாடல்களை தனுஷ் மேடையில் பாடி அசத்தினார்.

மாணவர்களின் உற்சாக கரகோஷத்துடன் நிகழ்ச்சியில் தனுஷிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கேப்டன் மில்லர் லுக்கில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்

கடந்த ஆண்டில் தனுஷின் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதில் திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் நடித்த நித்யா மேனனும் தனுஷுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருந்தார். படத்தின் கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழ் -தெலுங்கில் ரிலீசாகும் வாத்தி படம்

தமிழ் -தெலுங்கில் ரிலீசாகும் வாத்தி படம்

இந்தப்படங்களை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படமும் கடந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், இம்மாதம் 17ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்தி ஆடியோ ரிலீஸ்

வாத்தி ஆடியோ ரிலீஸ்

இதனிடையே இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சம்யுக்தா மேனன், ஜிவி பிரகாஷ், வெங்கி அட்லுரி உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் தன்னுடைய மகன்களுடன் தனுஷ் கலந்துக் கொண்டார்.

கேப்டன் மில்லர் கெட்டப்

கேப்டன் மில்லர் கெட்டப்

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துவரும் நிலையில், அந்தப் படத்தின் கெட்டப்பிலேயே தற்போது வாத்தி படத்தின் இசை வெளியீட்டிலும் கலந்துக் கொண்டார். வழக்கம்போல இந்த நிகழ்ச்சியிலும் அவரை வேட்டி -சட்டையிலேயே காண முடிந்தது. நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே உற்சாகமாக பேசியதுடன் படத்தின் பாடல்களையும் மேடையில் மற்ற பாடகர்களுடன் இணைந்து பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

சம்யுக்தாவிற்கு பிடித்த 3 படம்

சம்யுக்தாவிற்கு பிடித்த 3 படம்

இந்த நிகழ்ச்சியை பிரபல ஆங்கர் டிடி தொகுத்து வழங்கினார். மேடையில் பேசிய சம்யுக்தா மேனனிடம் அவர் சில கேள்விகளை கேட்டார். அப்போது தனுஷின் நடிப்பில் வெளியான படங்களில், இந்தப் படத்தில் நாம் ஹீரோயினாக நடித்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த படம் எது என்று டிடி கேட்டார்.

தனுஷுடன் நடிக்க விரும்பிய படம்

தனுஷுடன் நடிக்க விரும்பிய படம்

டிடியின் கேள்விக்கு பதிலளித்த சம்யுக்தா மேனன், தனுஷுடன் தான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைத்த படம் 3 என்றும் அந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்தமான தனுஷ் படம் என்றும் கூறினார். இந்தப் படத்தில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X