பணம் தரேன்.. புருஷனை விட்டுட்டு என்னோடு டேட்டிங் வரமுடியுமா? அத்துமீறிய தொழிலதிபரை சிக்க வைத்த நடிகை

கொச்சி: வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ நடிகைகளுக்கு மட்டும் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பாலியல் ரீதியான தொல்லைகள் என்பது இருந்து கொண்டே வருகிறது. அது திரைத்துறையைச் சார்ந்தவர்கள் தொடங்கி அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், ரசிகர்கள் வரை நீண்டு கொண்டே இருக்கிறது. இதற்குச் சமீபத்திய உதாரணமாக நடிகை சனா அல்தாஃப் பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்கள் அமைந்துள்ளன.

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் சனா அல்தாஃப் முக்கியமானவர். 15 வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். கேரள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பட உலகிலிருந்து சனா அல்தாஃப் விலகியுள்ளார். 2014ஆம் ஆண்டு ஹக்கீம் ஷாஜகான் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது கணவருடன் அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்தச் சூழலில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரால் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளார்.

Actress sana althaf actress leaked shocking email screenshots About Harassment From Chennai Businessman
Photo Credit:

சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்ற தொழிலதிபர், சனா அல்தாஃப்க்குத் தொடர்ந்து மெசேஜளை அனுப்பி, அவருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொல்லைகள் தாங்காமல், தனக்கு வந்த அநாகரிகமான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை சனா அல்தாஃப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எல்லை மீறிய மெசேஜ்: அந்த ஸ்கிரீன்ஷாட்களில், "அன்புள்ள சனா... எப்படி இருக்கிறீர்கள்? நான் சென்னையைச் சேர்ந்த பாலாஜி, ஒரு தொழிலதிபர். உங்களுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள்" என்று அவர் வெளிப்படையாகவே கேட்டுள்ளார். மேலும், "எப்போது என்னுடன் வர உங்களால் முடியும் என்பதையும் தெரிவியுங்கள்" என்று அந்த தொழிலதிபர் கேட்டுள்ளார். மாலத்தீவு அல்லது துபாய்க்குச் செல்லச் தயாராக இருப்பதாகவும், எனது இந்தச் ஆஃபர் பற்றி நன்றாக யோசியுங்கள்" என்றும் தொடர்ச்சியாக பல மின்னஞ்சல்களை அனுப்பி சனாவுக்குத் தொந்தரவு கொடுத்துள்ளார். தற்போது இந்தத் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் பாலாஜியின் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Actress sana althaf actress leaked shocking email screenshots About Harassment From Chennai Businessman
Photo Credit:

புகார் கொடுங்க: பாலாஜியின் மெசேஜ்களில் அவரது பணத்திமிரும், ஆணவமும் தெளிவாக வெளிப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்த சனா அல்தாஃப், "எவ்வளவு ரொமான்டிக்கான ஆஃபர்!" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். சனாவின் இந்தக் கிண்டலான பதிலுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நபர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும் என்றும் பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X