பெண் மானபங்கம்: நடிகை சனா கான் நண்பருடன் கைது

By Mayura Akilan

மும்பை: பெண்ணை தாக்கி, மானபங்கம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகை சனா கான், அவரது ஆண் நண்பர் இஸ்மாயில் கான் ஆகியோரை மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பாலிவுட் நடிகை சனாகான், சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, பயணம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். சனா கானையும், அவரது நண்பர் இஸ்மாயில் கானையும் தொடர்பு படுத்தி கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி தாள்களில் கட்டுரை வெளியானது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள், இதை ஊடகங்களுக்கு கசியவிட்ட நபர் யார் என்று விசாரித்தனர். அப்போது, பூனம் கண்ணா என்ற பெண் இந்த வேலையை செய்ததாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

பெண் மீது சந்தேகம்

பெண் மீது சந்தேகம்

இதனால், அந்த பெண் மீது நடிகை சனாகானுக்கும், அவரது நண்பர் இஸ்மாயில் கானுக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 21-ந் தேதி அவர்கள் இருவரும் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல மருத்துவமனை முன்பு பூனம் கண்ணா நின்று கொண்டிருந்ததை பார்த்தனர்.

பெண் மானபங்கம்

பெண் மானபங்கம்

உடனடியாக அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்மாயில் கான், பூனம் கண்ணாவின் கையை பிடித்து முறுக்கியதாகவும், தகாத இடங்களில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கலக்கம் அடைந்த பூனம் கண்ணா, இது தொடர்பாக அம்போலி போலீசில் புகார் செய்தார்.

நடிகை கைது

நடிகை கைது

புகாரின்பேரில் மும்பை அம்போலி போலீசார் வழக்குபதிவு செய்து, பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நடிகை சனா கானையும், அவரது நண்பர் இஸ்மாயில் கானையும் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர். இருவர் மீதும் பெண்ணை மானபங்கம் செய்தல், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜாமீனின் விடுதலை

ஜாமீனின் விடுதலை

சில மணிநேர விசாரணைக்குப் பின்னர் நேற்றே இருவரும் ஜாமினில் விடுதலை செய்ய்பட்டனர். இதனிடையே நடிகர் ஷகில் கான் அதே அம்போலி போலீஸ் நிலையத்தில் அதே நாளில் ஒரு புகார் அளித்து உள்ளார். அதில் ஒரு உடற்பயிற்சி கூடத்தில் வைத்து தன்னை இஸ்மாயில் கான் தாக்கியதாக புகார் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X