“தர்ஷனை ஏன் பிடிக்கும் தெரியுமா?”.. காதல் சீக்ரெட்களை பப்ளிக்காக போட்டுடைத்த ‘ரியல் காதலி’ சனம்!

பிக் பாஸ் தர்ஷன், சனம் ஷெட்டி நடித்துள்ள ’மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

Bigg Boss 3 Tamil: Sanam Shetty: சனம் பிக் பாஸ்-3 யின் அடுத்த போட்டியாளராக நுழைகிறார்- வீடியோ

சென்னை: அனைவரையும் கவர்ந்த தர்ஷன் தன்னையும் கவர்ந்துவிட்டார் என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மேகி'. ஜி.ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சனம் ஷெட்டியே தயாரித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமன் ஷெட்டி, தனக்கும் தர்ஷனுக்கு காதல் மலர்ந்தது எப்படி என விவரித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

"தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

அவர் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பேர் கலந்து கொண்டாலும், அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார்.

தர்ஷனுக்கு வாழ்த்துகள்

தர்ஷனுக்கு வாழ்த்துகள்

எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தர்ஷன் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மேகாலயா பெண்:

மேகாலயா பெண்:

கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தினோம். அனிதா அலெக்ஸ் தயாரிப்பில் ‘எதிர்வினை ஆற்று' என்ற படத்திலும் நடித்து வருகிறேன். அப்படத்தின் பாடலும் விரைவில் வெளியாகும்.

மும்மொழி படங்கள்

மும்மொழி படங்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 14 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், தயாரிப்பு என்று வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டும் என்கிற அனுபவம் கிடைத்தது. சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி' இருக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

 பாண்டியராஜனின் ரோல்

பாண்டியராஜனின் ரோல்

நடிகர் பாண்டியராஜனை அணுகி இப்படத்தில் பணியாற்ற அழைத்தோம். அவரும் மேகாலயா வரை வந்து சாப்பாடு, போக்குவரத்து போன்ற சிரமங்களுக்கிடையேயும் எங்களுடன் சகஜமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகினார். எனக்கும் அவருக்கும் இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது.

பாத்திமா பாபு:

பாத்திமா பாபு:

அவரை எதிர்க்கும் காட்சிகளில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர் வசனத்தில் என்ன உள்ளதோ அதை தயங்காமல் பேசு என்று என்னை ஊக்குவித்தார். பாத்திமா பாபு என் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி. பிக் பாஸ் வீட்டில் அவர் தர்ஷனை தனது மகன் மாதிரி பார்த்துக் கொண்டார்", என சனம் கூறினார்.

More from Filmibeat

Read more about: dharshan தர்ஷன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X