BB8: பாய்ஸ் டீம்ல யாருமே சொந்த புத்திய யூஸ் பண்ணல.. சனம் ஷெட்டி என்னங்க இப்படி சொல்றாங்க!
சென்னை: பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி சிறப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்ட நிலையில் முதல் வார எவிக்ஷனில் ஃபேட் மேன் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இந்த சீசன் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணிக்கு இடையிலான மோதல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் பிரச்னை மேல் பிரச்னை வந்தவண்ணம் உள்ளது. ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னை வருகின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது ஒரு இடத்தில் நமக்கே எரிச்சல் ஏற்பட்டாலும் ஒரு சில விஷயங்கள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 குறித்து பலரும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதில் நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டியும் ஒருவர். அவர் ஆண்கள் அணியினரின் ஆட்டம் குறித்தும் பெண்கள் அணியினரின் ஆட்டம் குறித்தும் பேசியதை இந்தத் தொகுப்பில் காணலாம்.
இந்த சீசனில் வீடே இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல், ஆண்கள் அணியினரின் எல்லையைத் தாண்டி பெண்கள் அணியினர் வரக்கூடாது. அப்படி வந்தால் பெண்கள் அணியினருக்கு தண்டனை கொடுக்கப்படும். அதேபோல், பெண்கள் அணியினரின் எல்லைக்குள் ஆண்கள் அணியினர் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் பெண்கள் அணியினர் ஆண்கள் அணியினருக்கு தண்டனை கொடுக்கலாம்.

போட்டி தொடங்கி இந்த வாரம்தான் இரண்டாவது வாரம். ஆனால் முதல் வாரத்தில் இவர்களின் ஆட்டம் மிகவும் போர் அடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் வீக் எண்டில் போட்டியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி அவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆட்டத்தின் போக்கு கொஞ்சம் மாறியுள்ளது.

சனம்: ஆனாலும் இரண்டாவது வாரத்தில் ஆண்கள் அணியினரின் நடவடிக்கை மற்றும் அவர்களின் கேம் ப்ளான பலரை அதிருப்தியிலும் பலரை ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ஆண்கள் அணியில் இருக்கக்கூடிய முத்துக்குமரனின் ஆட்டம் சிறப்பாக இருப்பதாக சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆண்கள் அணியில் முத்துக்குமரனின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவர் எடுக்கும் முடிவுகள்தான் ஆட்டத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக்குகின்றது.

முத்து: அதாவது, முத்துதான் பாய்ஸ் டீமின் சொத்து. அவர்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் ரூல்ஸ்க்குள் உள்ளது. ரூல்ஸ்க்காக செய்கின்றார்கள். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் செய்யவில்லை. பொய் சொல்லவில்லை. இதனால் நேர்மை இல்லாத கேம் மற்றும் கருணை இல்லாத கேம் என எதுவும் சொல்ல முடியாது. முத்து கொடுக்ககூடிய ஐடியாக்கள் சிறப்பாக இருக்கின்றது. அவரின் ஐடியாக்களை பாய்ஸ் டீம் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். கடந்த வாரத்தில் ரவீந்தர், இந்த வாரத்தில் முத்து இவர்கள் இருவரைக் கடந்து பாய்ஸ் டீமில் வேறு யார் தங்களது சொந்த புத்தியைப் பயன்படுத்துகின்றார்கள். அப்படி யார் முன் வந்தாலும் அவர்களை முத்து ஸ்டாப் செய்யப்போவது கிடையாது.

பெண்கள்: ஆனால் அப்படியே பெண்கள் அணியை எடுத்துக் கொண்டால் அவர்களின் ஆட்டம் எப்படி இருக்கின்றது என்றால், சமைக்கத் தெரியாது, அனுமதி கேட்க முடியாது, மரியாதை கொடுக்கத் தெரியாது. இவர்கள் இப்படியே நடந்து கொண்டால் பாய்ஸ் டீம் வேறு என்னதான் செய்வார்கள்? பெண்கள் அணியினருக்கு இது எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை என்றால், அழுதுகொண்டு இருக்கின்றார்கள். இதனால் பெண்களை அழ வைத்துக் கொண்டே உள்ளார்கள். இப்படியான முத்திரையை பதித்துவிட்டால் பாய்ஸ் அணியினரால் அவர்களின் ஆட்டத்தை ஆடவே முடியாது என்ற நிலையைத்தான் உருவாக்கப்பார்க்கின்றார்கள்" எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











