3 கோடி ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. தற்கொலை செய்து கொண்ட கணவர்.. கொந்தளித்த நடிகை!
சென்னை: முன்னாள் மனைவி மற்றும் குடும்பநல நீதிமன்றத்தின் தொல்லை தாங்க முடியாமல் பொறியாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி காட்டமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ், AI இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர், 1.5 மணி நேர வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில், தான் தனது மனைவியால் மிகவும் சிரமத்தை சந்தித்ததாகவும், பொய்யான பல வழக்குகளை போட்டு, என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் என்னை வாழவே விடாமல் கொடுமைப்படுத்தினார்கள்.

என் மரணம் ஒரு பாடம்: நீதிமன்றம், காவல்துறை மற்றும் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் என்னைப் போன்றவர்கள் வரி செலுத்தும் பணத்தில் தான் இயங்குகிறது. ஆனாலும், அவர்கள் என்னையும், எனது குடும்பத்தினரையும், இதுபோன்று குடும்ப பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களையும் துன்புறுத்துகின்றனர். இனிமேல் வாழவே முடியாது என்பதால், இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன். என் இறப்பிற்கு பிறகாவது, அப்பாவிகள் மீது பொய் வழக்குகளை போடுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என 24 பக்க தற்கொலைக் குறிப்பை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 கோடி ஜீவனாம்சம்: இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், நடிகை சனம் ஷெட்டி, தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷ் பேசி கடைசி வீடியோ மற்றும் அறிக்கையை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, Trigger Alert என பதிவிட்டுள்ளார். அந்த பகுதிவில் அவர், AI பொறியாளர் அதுல்சுபாஷின் கடைசி வார்த்தைகளை கேட்டு என் இதயமே உடைந்துவிட்டது. அவரிடம் விவாகரத்து பெற விரும்பி மனைவி, குழந்தைகளை பராமரிப்பதற்காக மாதம் ஒன்றுக்கு 40,000 பெற்ற பிறகும், ஜீவனாம்சம் 3 கோடி கேட்டு, கடந்த சில ஆண்டுகளாக மனைவி நிகிதா சிங்ஹானியா, வரதட்சணை கொடுமை, கொலை வழக்குகள் அவர் மீது போட்டு அவரை கொடுமைப்படுத்தி உள்ளார்.

பொய் வழக்கு: குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணையால் உண்மையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்திய சட்டம் உதவி வருகிறது. ஆனால் இந்த குடும்ப வழக்குகளில் விசாரணைகள் பாரபட்சமாக இருப்பதால், பணத்திற்காக சில பெண்கள் #FalseCases போடுவதை நாம் பார்த்து இருக்கிறோம்.மனைவிக்கு ஜீவனாம்சம், குழந்தைகளை வளர்க்க பணம் கேட்பதற்கு முன், கணவரின் நிதி நிலைமையை என்ன அவரால் அதை கொடுக்க முடியுமா என்பதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இப்படி கண்மூடித்தனமாக கணவன்மார்களின் உயிரைப் பறிப்பதை பெண் விட்டுவிட வேண்டும். மேலும், பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரையும் பாதுகாக்க #Familycourt சட்டங்கள், பாலின நடுநிலையாக்கப்பட வேண்டும் என்று சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications