நாலு பேருக்கு நல்லது செய்றதுன்னா ரொம்ப பிடிக்கும்.. சனம் ஷெட்டி சத்தமில்லாமல் செய்த உதவி !

சென்னை : கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பை இருந்து தவிக்கும் குறவர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச முககவசங்களையும் ரேசன் பொருட்களையும் கொடுத்து உதவினார் நடிகை சனம் ஷெட்டி.

Recommended Video

Sanam Shetty யிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த Bigg Boss நடிகர்

அம்புலி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான சனம் செட்டி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் பார்த்து வருகிறார். பல படங்கள் நடித்தாலும் தனக்கென ஒரு தனி அங்கீகாரம் கிடைப்பதற்காக இன்று வரை போராடிக் கொண்டு இருக்கிறார் சனம் செட்டி.

Actress Sanam Shetty helping poor people

பல குடிசை வாழ் மக்களும், சினிமா துறையில் உள்ள சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் துணை நடிகர்களும் லாக்டவுன் சமயத்தில் இந்த வேலை இல்லாத சூழ்நிலையில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

Actress Sanam Shetty helping poor people

கொரோனா வைரஸ் சாமானிய மக்களை பெரும் அளவு பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது குடியிருப்புக்கு அருகிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த குறவர் இன மக்களுக்கு உதவும் வகையில் தன் நண்பர்களுடன் இணைந்து சொந்தமாக "நம் மக்களின் குரல்" என்ற சிறிய சமூக நலத்திட்ட குழு ஒன்றை தொடங்கியுள்ளார்.

Actress Sanam Shetty helping poor people

"நம் மக்களின் குரல்" என்ற அவருடைய சமூக சேவை குழுவும் ஹெல்ப் ஆன் ஹங்கர் என்ற என்ஜிஓ குழுவும் இணைந்து அன்றாட பிழைப்பாளிகளான திருவான்மியூர் குறவர் இனத்தைச் சார்ந்த நூறு குடும்பங்களுக்கு இலவச முககவசங்களும் ரேசன் பொருட்களும் கொடுத்து உதவி உள்ளனர்.

Actress Sanam Shetty helping poor people

தற்போது அவர் செய்த உதவிகள் பெருமளவு பாராட்டுக்குரியதாக இருக்கின்றது.எப்பொழுதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி பல ரசிகர்களை கொண்டுள்ளார். இவர் உதவி செய்யும் புகைப்படத்தை பார்த்து பல நெட்டிசன்கள் இவருக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இவரை ஊக்குவிக்கும் விதமாக பல பாசிட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X