கவினை கொன்னவனை தூக்கில் போடுங்க.. சுபாஷினி நீ ஒரு கோழை.. நடிகை சனம் ஷெட்டி ஆதங்கம்!
சென்னை: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞன் கவினின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவின் என்ற இளைஞர், வேறு ஒரு சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், கவினை தனியாக அழைத்து கண்ணில் மிளகாய் பொடியை தூவி, வெட்டிப் படுகொலை செய்துவிட்டு,காவல் நிலையத்தில் சரணடைந்தார். நாட்டையை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து நடிகை சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நிலாவுக்கு செல்கிறோம், விண்வெளிக்கு சென்று கொண்டு வந்து கொண்டிருக்கும் எந்த காலத்தில், ஜாதி, வரதட்சணை கொடுமை, வன்முறை, கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கு. இதுபோன்ற விஷயங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால், ஏன் சட்டத்தை மாற்றவில்லை என்ற மிகப்பெரிய கேள்வியோடு மக்களின் சார்பாக நான் கேட்கிறேன். சட்டத்தை மாற்றுங்கள், இதுபோன்ற செயல்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை கொடுக்காமல், தூக்குத்தண்டனை கொடுக்கும்போது தான் அனைவரும் ஒரு வலிக்கு வருவார்கள். ஆயுள் தண்டனை கொடுத்து அவனை சிறைக்கு அனுப்பி விட்டால், இன்னும் 10 வருடத்தில் அவன் வெளியே வந்து வீரனாக சுற்றிக்கொண்டு தான் இருப்பான். மறுபடியும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் இதற்கு ஒரே ஒரு தீர்வு தூக்கு தண்டனை கொடுப்பதுதான்.

சுபாஷினி நீ ஒரு கோழை: சங்கர் இறந்த சம்பவத்தின் போதே. இதுபோன்ற ஒரு துயரமான சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்று சொன்னோம். ஆனால், மீண்டும் அதே போல கவினின் மரணம் நடந்து இருக்கிறது. இந்த விஷயத்தில் உண்மையான சிங்கப் பெண் யார் என்றால் கௌசல்யா தான். அவர் தான் தனது கணவருக்காக இந்த வழக்கில் துணிந்து வந்து போராடி, குற்றம் செய்தவர் அப்பாவாக இருந்தாலும் நீதிக்காக போராடினாள். அப்பாவிற்கு மட்டும் தண்டனை வாங்கித் தரக்கூடாது, இதில் அம்மாவிற்கும் தண்டனை வாங்கி தர வேண்டும் என்று நீதியின் பக்கம் நின்றார். ஆனால், கவினின் காதலி சுபாஷினி, நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் தைரியமாக முன்வந்து பேசுங்கள். உயிர் பயத்தில் எனக்கும் கவினுக்கும் சம்பந்தம் கிடையாது, என் பெற்றோருக்கு சம்மந்தம் கிடையாது என ஏன் கம்பி கட்டுறீங்க.
குடும்பமே நாசமா போய்விடும்: நாம் உயிராக காதலித்த கவினை இப்படி கொடூரமாக கொலை செய்து இருக்கிறார்கள் என்று துடித்து பேசியது போலவே இல்லை. உங்களை காதலித்த ஒரே ஒரு குற்றத்திற்காக இன்று கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார். காதலித்த பெண்ணை கைவிட்டுவிடக்கூடாது என்பதற்கான தனி ஆளாக நின்று உயிர்விட்டுள்ள கவீன் தான் வீரன். சுபாஷினி நீ ஒரு கோழை, உன் குடும்பம் ஒரு கோழை நாசமா போய்டுவீங்க, இனி மேல் நீங்க ஒரு நாளும் சந்தோஷமா வாழ முடியாது. கவின் அப்பா, அம்மாவிற்கு இருக்கும் வேதனையை நீங்களும் ஒரு நாள் அனுபவிப்பீங்க இது நடந்தே தீரும் என நடிகை சனம் ஷெட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்


Click it and Unblock the Notifications











