அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன்.. உச்சக்கட்ட கோபத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி!

சென்னை: மலையாள சினிமாவில் மட்டும் பாலியல் தொல்லை இல்லை, தமிழ் சினிமாவிலும் பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கு. என்கிட்ட யாராவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிப்பேன் டா நாயே என்று தைரியமாக சொல்லுவேன் என்று பத்திரிக்கையாளர் முன் சனம் ஷெட்டி ஆவேசமாக பேசினார்,

கொல்கத்தா மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதி கேட்டு, நடிகை சனம் ஷெட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்கு வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மருத்துவமனையில் டாக்டருக்கு நடந்த விஷயம் மட்டுமில்ல ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பல விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

Kolkata rape case sanam shetty press meet

சனம் ஷெட்டி: தொடர்ந்து நடந்து வரும் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்ல, குடும்பத்திற்கு உள்ளேயே பாதுகாப்பு இல்ல, குடும்ப நபர்களைக்கூட நம்ப முடியாத சூழ்நிலைதான் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் 4 வழக்குகள் பதிவாகி உள்ளது. கொல்கத்தாவில் நடந்த பாலியல் வன்கொடுமைக்காக இங்கு ஏன் போராட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு, நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்று உள்ளது. இதில் அப்பள்ளியின் முதல்வர் சம்பந்தப்பட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை: அதே போல ஹேமா கமிஷன் அறிக்கையில் மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல் தலைவிரித்து ஆடுவதாக அறிக்கை வெளியாகி உள்ளது. அதை வெளியிட்ட ஹேமா மேடத்துக்கும் அந்த குழுவிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அட்ஜெஸ்ட்மெண்ட் கேரள சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் இருக்கு, என்னிடம், இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை, அந்த இடத்திலேயே செருப்பால அடிப்பேன் டா நாயே என்று சொல்லி இருக்கேன். அதற்காக சினிமாவில் அனைவரும் அப்படித்தான் என்று சொல்லவில்லை. ஒழுக்கமான எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

மாற்றம் வேண்டும்: தினம் தினம் பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பயந்து, பெண்களை வெளியில் அனுப்பாமல், அந்த ஆடைகளை போடாதே, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். அடிப்படை மாற்றத்தை ஆண்களின் மனதில் கொண்டு வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதற்காகத்தான் இந்த போராட்டம், இது தான் சரியான நேரம், அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் வர வேண்டும் என்று சனம் ஷெட்டி அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X