அச்சச்சோ.. அப்போ இவங்களும் அவுட்டா.. பிக்பாஸ் பங்கேற்பது குறித்து பிரபல நடிகையின் பகீர் பதில்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக கூறப்பட்ட பிரபல நடிகை அந்நிகழ்ச்சி குறித்து கூறியிருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்க உள்ளது. அதற்கான கடைசிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

காதலர் தர்ஷன்

காதலர் தர்ஷன்

ஆனாலும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் என போட்டிளார்களின் பட்டியல் வைரலாகி வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அடிப்பட்டு வந்தவர் சனம் ஷெட்டிதான். கடந்த சீசனிலேயே பங்கேற்க வேண்டியவர் சனம். ஆனால் அந்த முறை அவரது காதலரான தர்ஷன் பங்கேற்றார்.

பிரேக்கப் விவகாரம்

பிரேக்கப் விவகாரம்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த தர்ஷன், சனம் ஷெட்டி தன்னுடைய முன்னாள் காதலருடன் இரவு பார்ட்டி பண்ணினார், பிகினியில் போட்டோ ஷுட் நடத்தினார் என சப்பை காரணங்களை கூறி கழட்டி விட்டார். அவர்களின் பிரேக்கப் விவகாரம் பல நாட்கள் புகைந்தது.

பிரபல மாடல்

பிரபல மாடல்

இந்நிலையில் இம்முறை சனம் ஷெட்டிக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. பிரபல மாடலான சனம் ஷெட்டி, ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதோடு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நானும் கேள்வி பட்டேன்

நானும் கேள்வி பட்டேன்

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நீங்கள் பிக்பாஸில் பங்கேற்க போவதாக கேள்விப்பட்டோம் என தொகுப்பாளர் கூற நானும் கேள்வி பட்டேன் என கூறியிருக்கிறார் சனம் ஷெட்டி.

குழப்புறீங்களா?

குழப்புறீங்களா?

இதனை பார்த்த ரசிகர்கள், அப்போ நீங்கள் பிக்பாஸில் பங்கேற்க போவதில்லையா என கேட்டு வருகின்றனர். ஆனால் நம்ப தகுந்த வட்டாரத்தில் வரும் தகவல்கள் சனம் ஷெட்டி கன்ஃபார்ம் ஆனதாக தெரிவிக்கிறது. இதனால் ரசிகர்களை குழப்ப இந்த வேலையா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Recommended Video

நெட்டிசன்களுக்கு சவுக்கடி வார்னிங் கொடுத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்
ஒரு நாள் மட்டுமே

ஒரு நாள் மட்டுமே

ஏற்கனவே கடைசி நேரத்தில் நடிகை கிரண் ரத்தோர், விஜே அர்ச்சனா ஆகியோர் பங்கேற்பது கேள்வி குறியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் சனம் ஷெட்டியின் இந்த பேட்டி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X