தளபதி 69: விஜய்யுடன் பூஜா ஹெக்டே.. போட்டோவைப் பார்த்து கடுப்பான நடிகை!
சென்னை: தளபதி விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டெ கமிட்டாகி உள்ள நிலையில், நேற்று மாலையும் கழுத்துமாக இருந்த பூஜை போட்டோஸ் இணையத்தில் டிரெண்டான நிலையில், அந்த போட்டோவைப் பார்த்த சனம் ஷெட்டி எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காதா என இணையத்தில் புலம்பி உள்ளார்.
விஜய் GOAT படத்திற்கு பிறகு தளபதி 69 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியானது.இதில் விஜய்யுடன், சினேகா,பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, ஜெயராம், யோகி பாபு, மைக் மோகன், பிரேம்ஜி, வைபவ், அரவிந்த் என பலர் நடித்திருந்தனர். நல்ல வசூலை பெற்ற இத்திரைப்படம் ஒரு மாத இடைவெளியில் ஓடிடி நெட்பிளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 3ந் தேதி வெளியானது.

தளபதி 69: இந்த படத் தொடர்ந்து, விஜயின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்தது. அதன் படி KVN தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பாஜு, பிரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
புலம்பும் நடிகை: இதையடுத்து தளபதி 69 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் விஜய், பூஜா ஹெக்டே, எச் வினோத் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இணையத்தில் இந்த போட்டோக்கள் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் நிலையில், நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விஜய் பூஜா ஹெக்டேவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து. நமக்கெல்லாம் வாய்ப்பு வராதா விஜய் சார் ?பரவாயில்லை, ஜோடி நல்லா தான் இருக்கு, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் தமிழில்: நடிகை பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகம் ஆனார்.அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், தெலுங்கு பக்கம் சென்ற பூஜா ஹெக்டே அங்கு பல வெற்றிப்படத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் தமிழக்கு வந்த இவர் விஜய்யுடன் இணைந்து பிஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படம் கணிசான வசூலை பெற்ற போதும், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











