உங்கள் விசுவாசம் எங்கே? வென்றிருந்தால் விலகியிருப்பீர்களா? மய்யத்தினரை விளாசும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை விளாசி தள்ளியுள்ளார் பிக்பாஸ் பிரபலம்.

Recommended Video

Kamal Hassan காட்டம்! தோல்வியின்போது ஓடும் கோழைகளைப் பற்றி பொருட்படுத்தியதில்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒவ்வொருவராய் விலகி வருகின்றனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்தது.

அந்தக் கட்சியை சேர்ந்த ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனும் பாஜக வேட்பாளர் வானதியிடம் வீழ்ந்தார்.

கட்சியில் இருந்து விலகல்

கட்சியில் இருந்து விலகல்

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பில் இருந்த ஒவ்வொருவராய் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் முதலில் விலகினார்.

கமல் காட்டம்

கமல் காட்டம்

அப்போது அவர் ஒரு துரோகி என்றும் களையே தன்னை களை பறித்துக்கொண்டது என்றும் காட்டமாக அறிக்கை வெளியிட்டார் கமல். அதனை தொடர்ந்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் நேற்று விலகினர்.

சனம் ஷெட்டி விளாசல்

சனம் ஷெட்டி விளாசல்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை பிக்பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி உங்கள் விசுவாசம் எங்கே என கேட்டும் மக்களை ஏமாற்றிவிட்டீர்கள் என்று கூறியும் விளாசியுள்ளார்.

வென்றிருந்தால் விலகியிருப்பீர்களா?

வென்றிருந்தால் விலகியிருப்பீர்களா?

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, உங்கள் விசுவாசம் எங்கே? உங்கள் எல்லோருக்கும் என்னுடைய கேள்வி: வெற்றி பெற்றிருந்தால் விலகியிருப்பீர்களா?

ஏமாற்றி விட்டீர்கள்

ஏமாற்றி விட்டீர்கள்

விலகிய மக்கள் நீதி மய்யம் கட்சியினரே நீங்கள் அக்கட்சிக்கும் கமல் சாருக்கும் மட்டும் நம்பிக்கை துரோகம் செய்யவில்லை. முக்கியமாக முதல் முறையாக உங்களுக்கு வாக்களித்த பலரையும் ஏமாற்றி விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

சமூகம் சார்ந்த செயல்

சமூகம் சார்ந்த செயல்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டி சினிமா மட்டுமின்றி சமூகம் சார்ந்த செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை விளாசி தள்ளியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X