தேவாரா படத்திற்கு கவர்ச்சி நடனமாடி வாழ்த்து தெரிவித்த ஷனம் ஷெட்டி.. வீடியோவ பாக்கனுமே!
சென்னை: ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் தேவரா படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வெளியானது. 'பத்தவைக்கும்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
இந்த பாடல் இணையத்தில் தற்போது ட்ரெண்டில் உள்ளது. தேவாரா படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலின் தெலுங்கு வெர்ஷனுக்கு நடிகை சனம் ஷெட்டி கிளாமரான நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதாகர் மிக்கிலினேனி - கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாராகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதன் முதல் நாளை திரைக்கு வரப்போகிறது, அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாகம் நாளை வெளியாகின்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகின்றது.

இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஜான்வி கபூர் தனது முதல் படத்திலேயே பாரபட்சமின்றி கிளாமர் விருந்து வைத்துள்ளது பல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தவைக்கும் பாடலின் லிரிக் வீடியோவில் இடையிடையே வரும் பாடலின் ஒரிஜினல் வீடியோவில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ரொமான்ஸ் செய்கின்றேன் என, அந்த பாடலை கிளாமர் பாடலாக மாற்றியுள்ளனர் என்றே கூறலாம்.

ட்ரெண்ட்: இந்த பாடல் தெலுங்கில் சுட்டமல்லே என்ற பெயரில் வெளியானது. தெலுங்கு பாடல் யூடியூப் மியூசிக்கில் டாப் லிஸ்ட் அளவில் டிரெண்டானது. இந்தியிலும் இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. தமிழ் மற்றும் இந்தியில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்துள்ள பாடல் என்பதற்காக பலரும் பார்த்து பாராட்டினர்.
மேலும் ஜான்வி கபூரின் கவர்ச்சி நடனம் மற்றும் எல்லை மீறிய ரொமான்ஸ் நடனத்தை திரும்பத் திரும்ப ரசிக்க ரசிகர்கள் அந்த லிரிக் வீடியோவை திரும்பத்திரும்ப பார்த்து உலக அளவில் ட்ரெண்ட் செய்தனர். இந்தப் பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் ட்ரெண்ட் ஆனது.

ஷனம் கவர்ச்சி நடனம்: இந்நிலையில் படக்குழுவினருக்கு படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற, நடிகை ஷனம் ஷெட்டி பத்தவைக்கும் பாடலின் தெலுங்கு வெர்ஷனான சுட்டமல்லே பாடலுக்கு கவர்ச்சியான நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வாழ்த்து யாருமே எதிர்பார்க்காத வாழ்த்தாக இருப்பதாக பலர் கூறுகின்றனர். மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து கொண்டு பக்கா கிளாமராக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் ஷனம் ஷெட்டி. இந்த வீடியோ குறித்த பேச்சு தற்போது இணையத்தில் அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











