எத்தனை நாளைக்குதான் நானும் அப்படியே இருக்குறது.. கவர்ச்சி கோதாவில் குதித்த பிரபல நடிகை!

சென்னை: நடிகை சஞ்சனா நட்ராஜன் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் இப்படியா என வாயை பிளந்துள்ளனர்.

நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழ அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நட்ராஜன். இறுதிச் சுற்று படத்தில் நடிகை ரித்திகா சிங்கிற்கு அக்காவாக நடித்தார்.

இதன் மூலம் பெரும் பிரபலமானார். நோட்டா படத்திலும் அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ரஜினியின் 2.o படத்திலும் நடித்துள்ளார்.

சுருளி படத்தில்..

சுருளி படத்தில்..

டாப்ஸி நடிப்பில் வெளியான கேம் ஓவர் படத்திலும் நடித்திருக்கிறார் சஞ்சனா நட்ராஜன். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் சுருளி படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் சஞ்சனா நட்ராஜன். இதனை தொடர்ந்து வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

ரீச்சாகவில்லை

ரீச்சாகவில்லை

ஆனால் அடுத்தடுத்து சஞ்சனாவுக்கு வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இதனால் மற்ற நடிகைகளை போல தானும் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். வழக்கமாக உடல் முழுவதும் மூடியப்படி போட்டோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் அந்த போட்டோக்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரீச்சாகவில்லை.

கவர்ச்சியில் குதித்தார்

கவர்ச்சியில் குதித்தார்

இதனால் கவர்ச்சியில் தாராளம் காட்ட தொடங்கி விட்டார். என்னதான் திறமை இருந்தாலும் கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என நட்பு வட்டாரம் அட்வைஸ் கூற நடிகை ஆடை துறப்பில் இறங்கிவிட்டார். பிகினி டாப் போன்ற மோலாடையை அணிந்திருக்கும் சஞ்சனா, கீழே தொடை வரை ஓபன் உள்ள பாவாடையை அணிந்திருக்கிறார்.

கிளாமர் போஸ்

கிளாமர் போஸ்

இந்த உடையில் நின்றப்படியும் சாய்ந்து படுத்தப்படியும் செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். சஞ்சனாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறாது.

இவள் யாரிவள்..

இவள் யாரிவள்..

சஞ்சனாவின் போட்டோவை பார்த்த இந்த ரசிகர் கவிஞராகவே மாறிவிட்டார். அவரது தனது பதிவில், இவள் யாரிவள் இந்திரன் மகளா! இந்த பூமியின் சந்திரன் நகலா!
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா..
அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா!
அதில் வீசிடும் வாசனை அகிலா!
இவள் பார்த்தது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவள்.. என பதிவிட்டுள்ளார்.

உலகம் தெரியாம..

உலகம் தெரியாம..

சஞ்சனாவின் இந்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நாமலும் எவ்வளவோ பண்றோம் ஆனால்.. என அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காததை மறைமுகமாக கூறியிருக்கிறார். மற்றோரு நெட்டிசனான இவர், பாவம் இன்னும் உலகம் தெரியாமலே இருக்கீங்க என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X