42 வயதில், அம்மாவான பிரபல முன்னாள் ஹீரோயின்.. குழந்தை போட்டோ வெளியிட்டவருக்கு ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை: நடிகை சங்கவி அழகான பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார்.
Recommended Video
அஜித்தின் அமராவதி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், நடிகை சங்கவி.
விஜய்யுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கோகுலத்தில் சீதை
90- களில் முன்னணி நடிகையாக இருந்த சங்கவி, ரஜினி, விஜயகாந்த், கமல், சரத்குமார் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்துள்ள சங்கவி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக, மூடர் கூடம் நவீன் தயாரித்த கெளஞ்சி என்ற படத்தில் நடித்திருந்தார்.

வீட்டில் மாப்பிள்ளை
நடிகை சங்கவியுடன் நடித்த நடிகைகள் எல்லோரும் திருமணம் ஆகி செட்டிலாகிவிட, சங்கவி மட்டும் பல வருடங்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரைவில் என் திருமணம் நடக்கும் என்றே தெரிவித்து வந்தார்.

கணவர் குடும்பம்
இந்நிலையில், தனது 38 வது வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காத சங்கவி, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பெண் குழந்தை
இந்நிலையில் தனது 42 வது வயதில் அவர் தனது முதல் குழந்தையைப் பெற்றுள்ளார். அவருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்துள்ளது. குழந்தையின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சங்கவி, எனது அழகான தேவதை என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











