Sangeetha: அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. விஜய்க்கு ஓகே சொன்ன பிரபல நடிகை!

சென்னை: நடிகர் அஜித் -தேவயாணி கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த படம் காதல் கோட்டை. இந்தப் படத்தில் தேவயாணியின் கேரக்டர் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

இந்தக் கேரக்டரில் நடிக்க முன்னதாக நடிகை சங்கீதாவிற்கே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜய்யுடன் நடிக்க கிடைத்த சான்சிற்கு அவர் ஓகே சொல்லியுள்ளார்.

Actress Sangeetha about the movie she missed with Ajithkumars Kadhal kottai

விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைத்த நிலையில், விஜய்க்கு ஓகே சொல்லியுள்ளார் சங்கீதா.

அஜித்துடன் காதல் கோட்டை படத்தின் வாய்ப்பை மறுத்த நடிகை சங்கீதா: நடிகை சங்கீதா எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக என்பன உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 50 படங்களுக்கு மேல் நடித்த சங்கீதா, ஒரு கட்டத்தில் திருமணமாகி செட்டில் ஆனார். நீண்ட காலங்களாக சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த சங்கீதா, தற்போது மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது சமீபத்திய பேட்டிகளில் விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் குறித்து பகிர்ந்து வருகிறார்.

என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின்மூலம்தான் இவர் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் அவருக்கு ஓரளவிற்கு கைகொடுக்க தொடர்ந்து இதயவாசல், கேப்டன் மகள், மகாநதி, எல்லாமே என் ராசாதான், பூவே உனக்காக என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் சங்கீதா இணைந்து நடித்திருந்த பூவே உனக்காக அவரது கேரியர் பெஸ்ட் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் இவரது குறும்புத்தனமான கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், மலையாளம் கன்னடம் என மூன்று மொழிகளிலும் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார். இந்தப் பேட்டியில் பூவே உனக்காக படத்தின்போதே, அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் அஜித்துடன் இணைந்து பூவே உனக்காக மற்றும் காதல் கோட்டை படங்களில் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது தான் விஜய்யின் பூவே உனக்காக படத்தை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இரு படங்களின் கதையும் தன்னை ஈர்த்த நிலையில் எந்தப் படத்தை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தனக்கு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய்யுடன் நடித்த பூவே உனக்காக படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்ததை குறிப்பிட்டுள்ள சங்கீதா, இந்தப் படத்தை தான் தேர்ந்தெடுக்க படத்தின் இயக்குநர்தான் காரணம் என்றும் கூறியுள்ளார். பூவே உனக்காக படத்தின் இயக்குநர் விக்ரமனுக்காகவே அந்தப் படத்தை தான் தேர்ந்தெடுத்ததாக குறிப்பிட்டுள்ள சங்கீதா, ஆனாலும் அஜித்தின் காதல் கோட்டை படத்தை மிஸ் செய்தது தனக்கு தற்போதும் வருத்தத்தை அளித்து வருவதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X