Sangeetha: விஜய்யை வச்சுதான் எனக்கான அங்கீகாரமே கிடைச்சது.. நடிகை சங்கீதா ஓபன் டாக்!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
நாளைய தீர்ப்பு படம்மூலம் ரசிகர்களிடையே ஹீரோவாக அறிமுகம் ஆனவர் விஜய். அவருக்கு ஆரம்பக்கால படங்கள் சரியாக கைகொடுக்கவில்லை.
அவரை ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள காரணமாக அமைந்த படங்களில் முதன்மையான படமாக பூவே உனக்காக படம் கருதப்படுகிறது.

விஜய் மூலம் கிடைத்த அங்கீகாரத்தை பகிர்ந்த நடிகை சங்கீதா: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் -லோகேஷ் கூட்டணி அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சர்வதேச அளவில் மிகச்சிறப்பாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்ட நிலையில், கேரளா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் டிக்கெட் புக் செய்ய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
நாளை தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஜய். இந்தப் படம் கல்லூரி மாணவனை மையமாக கொண்டு வெளியானது. இதே ஜானர்களில் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார் விஜய். இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கவில்லை. தொடர்ந்து காதலை மையமாக வைத்து குடும்ப சென்டிமெண்ட்டுடன் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் விஜய் கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன.
இந்தப் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு விருப்பமான ஹீரோவாக தன்னை உருமாற்றிக் கொண்டார் விஜய். குறிப்பாக பூவே உனக்காக படம் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. தான் விரும்பிய காதலியின் காதலை நிறைவேற்றி வைப்பதற்காக, அவர்களது குடும்பத்தினரை கன்வின்ஸ் செய்வதற்காக களமிறங்கும் நாயகனின் கதை, புதிதாக இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு கொடுத்தது. எண்ணெய் வழியும் முகத்துடன் படங்களில் நடித்துவந்த விஜய்க்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
இந்தப் படத்தில் நடிகை சங்கீதா நாயகியாக நடித்திருந்தார். படத்தில் மற்றொரு நாயகி இருந்தாலும், சங்கீதாவின் குறும்புத்தனமான கேரக்டர், ரசிகர்களின் அதிகமான வரவேற்பை பெற்றது. ஆயினும் விஜய், எந்தக் காரணத்திற்காக அந்த ஊருக்கு வந்தார் என்பது தெரிந்தவுடன் அப்படியே அவரது கேரக்டர், மெச்சூர்டாக மாறுவதையும் ரசிகர்கள் கொண்டாடினர். இந்தப் படத்தில் விஜய்க்கு இணையாக ஸ்கோர் செய்திருந்தார் சங்கீதா.
இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் மலையாளப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சங்கீதா, விஜய்யுடன் நடித்த பூவே உனக்காக படம்தான் தனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததாக தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தற்போதும் விஜய்யை மிகவும் அதிகமாக பிடிக்கும் என்றும் திரையில் அவரை பார்த்தால், அவரை மட்டுமே பார்ப்பேன் என்றும் மற்ற விஷயங்கள் தன்னை அதிகமாக கவராது என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தன்னை விஜய்யுடன் நடித்த நடிகை என்றே ரசிகர்கள் அணுகுவார்கள் என்று பெருமை தெரிவித்துள்ள சங்கீதா, மலையாள ரசிகர்களும் அதிகளவில் தன்னை விஜய்யுடன் நடித்த நடிகையாகவே பார்ப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். மலையாள ரசிகர்கள் தற்போதும் தன்னிடம் வந்து விஜய்யை மீட் செய்வீர்களா என்று தன்னிடம் கேட்பார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். தான் அவரை சந்தித்து பல வருடங்கள் ஆனதையும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











