சல்மான் கானின் முன்னாள் காதலிக்கு 60 வயசு ஆயிடுச்சா.. நம்ப முடியலையே.. வைரலாகும் கேக் கட்டிங்!

சென்னை: நடிகை சங்கீதா பிஜ்லானியின் வித்தியாசமான பிறந்தநாள் விழா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையான சங்கீதா பிஜ்லானி 1980ஆம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் சங்கீதா பிஜ்லா.

ஆதித்ய பஞ்சோலிக்கு ஜோடியாக Qatil என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார்.

கேக் கட்டிங் வீடியோ

கேக் கட்டிங் வீடியோ

பின்னர் த்ரிதேவ், ஹத்யார். ஜுர்ம், யோதா, யுகந்தர் இஸாத், லக்ஷ்மன் ரேகா உள்ளிட்ட பல பிளாக் பஸ்டர் ஹிட்களை கொடுத்துள்ளார். நடிகை சங்கீதா பிஜ்லானி நேற்று முன்தினம் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது கேக் கட்டிங் வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

சோஷியல் டிஸ்டன்சிங்

சோஷியல் டிஸ்டன்சிங்

அதில் பியூட்டி சலூன் வாசலில் தனது பிறந்த நாள் கேக்கை கட் செய்துள்ளார் சங்கீதா பிஜ்லானி. அவரை சுற்றி பியூட்டி சலூன் ஊழியர்கள் பிபிஇ உடை மற்றும் மாஸ்க் அணிந்து சோஷியல் டிஸ்டன்சிங் மெயின்டெய்ன் செய்தப்படி நின்று பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடியுள்ளனர்.

தந்தையுடன் பிறந்தநாள்

தந்தையுடன் பிறந்தநாள்

நடிகை சங்கீதா பிஜ்லானியும் மாஸ்க் அணிந்துள்ளார். மெழுவர்த்தியை அணைப்பதற்காக மாஸ்க்கை கழட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை சங்கீதா பிஜ்லானி, தனது தந்தையுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

சல்மான் கானுடன்

சல்மான் கானுடன்

அப்போது தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் தனது அப்பாவின் பாடலுடன் தொடங்கியிருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். நடிகை சங்கீதா பிஜ்லானி கடந்த ஆண்டு தனது பிறந்த நாளை அவரது முன்னாள் காதலரான சல்மான் கானுடன் அவரது வீட்டில் கொண்டாடினார்.

திருமண தேதி

திருமண தேதி

1980களில் சங்கீதாவும் சல்மான் கானும் டேட்டிங்கில் இருந்தனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர். இருவரின் திருமணத்திற்கான தேதி கூட குறிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

திருமணம் செய்ய முடிவு

திருமணம் செய்ய முடிவு

அதாவது சல்மான் மற்றும் சங்கீதாவும் 1994ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். 1993 ஒரு நேர்காணலில், சல்மான், "ஆம், நான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். நேரம் வரும்போது செய்வேன். அது சங்கீதாவுடன் அல்லது வேறு யாருடனாவது இருக்கலாம். " என்று கூறினார்.

திருமணம் நிறுத்தம்

திருமணம் நிறுத்தம்

இருவரின் திருமணத்திற்கான திருமண அழைப்பிதழ்கள் கூட அச்சிடப்பட்டதாக கூறப்படுகிறது, ஆனால் சங்கீதா திருமணத்தை நிறுத்தி விட்டார். இருப்பினும் அவர்களுக்குள் இதுவரை நட்பு தொடர்ந்து வருகிறது. சங்கீதாவின் பிறந்தநாள் வீடியோவை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு 60 வயது என்பதை நம்வே முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X