விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கும் விக்ரம் ஹீரோயின்... !

இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகை சங்கீதா, விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடிக்கிறார்.

சென்னை: விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தில் நடிகை சங்கீதா நடிக்கிறார்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் " தமிழரசன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ்கோபு, ராதாரவி, சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.

Actress Sangeetha is back again for Vijay Antony movie

தமிழரசன் படத்தில் மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்த சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.

இது பற்றி சங்கீதா கூறியதாவது, "எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன். இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது" என்றார்.

இளையராஜா இசையமைக்கும் தமிழரசன் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, பாபு யோகேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X