சங்கீதா, கிரிஷ் விவாகரத்தா? மாமியார் கேட்ட அந்த கேள்வி..நடிகையின் பளீச் பதில்!
சென்னை: பிரபலமான நடிகை சங்கீதா, உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டர் ரோல்களை ஏற்று நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். மேலும் இவர் விக்ரம், சூர்யாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த இவர், பின்னணி பாடகர் ஆன கிரிஷ்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், சங்கீதா அளித்துள்ள பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்: அதில், நான் கிரிஷை மிகவும் விரும்பினேன், ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்ட பின், திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னேன். நாங்கள் மூன்று மாதங்கள் டேட்டிங்கில் செய்தோம். அதன் பிறகு மோதிரம் மாற்றிக்கொண்டோம். எட்டு மாதத்திற்குள்ளே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. எனக்கு அவரை பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. திருமணத்தின் போது கிரிஷியின் குடும்பத்திலும் என்னுடைய குடும்பத்திலும் சில பிரச்சனைகள் இருந்தது.
பயத்தில் இருந்தேன்: எனக்கு கடைசி வரை இந்த திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற கவலை இருந்தது. அந்த நேரத்தில் இப்படி ஒரு சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று நினைத்தேன். கடைசியில் கல்யாணம் ஆகட்டும் மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டு ரொம்ப கடுமையாகவே இருந்தது. அதன் பிறகு இருவரும் எங்களுக்கான நேரத்தை ஒதுக்கி பேசி அனைத்தையும் சரி செய்தோம் என்றார்.
மாமியார் கேட்ட கேள்வி: அப்போது தான், பேப்பரில் நானும் கிரிஷூம் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவியது. இதைப்பார்த்த என் மாமியார், என் வீட்டுக்கு வந்து நான் ஒன்னு கேட்பேன் மறைக்காமல் பதில் சொல்லுவியானு கேட்டாங்க, என்ன சொல்லுங்க என்றேன் அப்போது அவர்கள், நீயும் என் மகனும் விவாகரத்து பண்ண போகிறீர்களா என்ற கேள்வியை எழுப்பினார். அவர் கேட்ட அந்த கேள்வியால் ஒரு நிமிடம் பதறிப்போய் விட்டேன். ஏன் இப்படி கேக்குறீங்க என்றேன். உடனே அவர் பத்திரிக்கையில் அப்படித்தான் செய்தி வருகிறது. அதை பார்த்து எனக்கு ஒரு விதமான பயம் வந்ததால், உன்னிடம் இந்த கேள்வியை கேட்கிறேன் என்று கூறினார்.
எல்லாமே கற்பனை: நீங்கள் தினமும் வீட்டுக்கு வந்து போறீங்க இங்கே என்ன நடக்கிறது என்று எல்லாமே உங்களுக்கு தெரியும், ஆனால் வெளியில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் ஏதோ ஒரு கற்பனையில், எதையோ எழுவதை எப்படி நம்புறீங்க என்று கேட்டேன். அது தான் பத்திரிக்கையாளர்களின் பவர் அவர்கள் எதை எழுதினாலும் அதை மற்றவர்கள் நம்புவார்கள் என்று நடிகை சங்கீதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











