மீண்டும் ராஷ்மிகாவுக்கு அம்மாவா அந்த நடிகை.. தளபதி 66 படத்தின் அடுத்த ஆன்போர்டு யாரு தெரியுமா?
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஆன்போர்டு அறிவிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே ஷாம் உள்ளிட்ட நடிகர்கள் விஜய் படத்தில் நடிக்கப்போகும் சந்தோஷ செய்தியை அறிவித்து விட்ட நிலையில், உடனடியாக யார் யாரெல்லாம் படத்தில் இணைந்துள்ளனர் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே ராஷ்மிகாவுக்கு அம்மாவாக நடித்த அந்த பிரபல நடிகை தற்போது தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார்.

தளபதி 66
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வருகிறது தளபதி 66. சமீபத்தில் இதன் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஹைதராபாத்துக்கு சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகின. இந்நிலையில், தொடர்ந்து ஆன்போர்டு அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

நியூ லுக்
படத்திற்கு படம் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்துடன் நடிகர் விஜய் கெட்டப் சேஞ்ச் பண்ணி நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் வெள்ளை தாடியுடன் விஜய் நடித்த நிலையில், தற்போது யங் லுக்கில் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் வீடியோ கால் மூலம் கசிந்த அந்த புகைப்படம் வெறித்தனமாக டிரெண்டாகி வருகிறது.

இத்தனை பேரா
பூவே உனக்காக படம் போல இந்த படமும் வித்தியாசமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என இயக்குநர் வம்சி சொன்ன நிலையில், ஏகப்பட்ட சீனியர் நடிகர்களை படத்தில் களமிறக்கி உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

சங்கீதா ஆன்போர்டு
தயவு செய்து ஜெகபதி பாபுவை வில்லனாக போட்டீறாதீங்க என விஜய் ரசிகர்கள் கெஞ்சி வந்த நிலையில், ஏகப்பட்ட நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் நடிகை சங்கீதாவும் தற்போது தளபதி 66 படத்தில் ஆன்போர்டு ஆகி உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராஷ்மிகாவுக்கு மீண்டும் அம்மாவா
சரத்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் ஜெயசுதா விஜய்க்கு அம்மா கதாபாத்திரத்திலும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகாவின் அப்பாவாக பிரபு மற்றும் அவரது அம்மாவாக சங்கீதா நடிக்க உள்ளனரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏற்கனவே மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வரு படத்தில் ராஷ்மிகாவுக்கு அம்மாவாக சங்கீதா நடித்திருப்பார்.

விஜய் அப்படி சொன்னாரே
தெலுங்கு மற்றும் தமிழ் பைலிங்குவல் படம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது முழுக்க முழுக்க தமிழ் படம் தான் என பீஸ்ட் பட புரமோஷன் பேட்டியில் விஜய் சொல்லி இருந்தார். ஆனால், வரிசையாக அறிவிக்கப்படும் நடிகர்கள் எல்லாமே தெலுங்கில் செம பிசியாக நடித்து வருபவர்கள் என்பதால், இரு மொழி ரசிகர்களையும் மகிழ்விக்கவே இயக்குநர் இப்படியொரு திட்டத்தை தீட்டி உள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











