இந்த மாதிரி ஜென்மங்கள் இருக்காங்களா? வணங்கான் படம் பார்த்து கண்கலங்கிய சங்கீதா!

சென்னை: பாலா மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் அருண் விஜய்,ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி என பலர் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும்,பாலா மற்றும் அருண்விஜய்யின் நடிப்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு நடிகர் சூர்யா மீண்டும் இயக்குனர் பாலாவுடன் இணைந்து "வணங்கான்" என்ற படத்தில் நடிக்க இருப்பதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், திடீரென சூர்யா வணங்கான் படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன் பின், இந்த படத்தில் அருண்விஜய் கமிட்டாகி நடித்தார். நான்கு நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vanangaan bala arun vijay

வணங்கான்: இதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து எடுத்த காட்சிகள் எல்லாம் மீண்டும் எடுக்கப்பட்டன. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வணங்கான் திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பொங்கல் ரேசில் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியான போதும், வணங்கான் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

அழுது விட்டேன்: இந்நிலையில், வணங்கான் படத்தை பார்த்த சங்கீதா, வணங்கான் படம் பார்த்து விட்டு அழுகையை அடக்கவே முடிவில்லை, இதுபோன்ற ஜென்மங்கள் இருக்கிறார்களா? என்று பாலா சாரிடம் கேட்டேன். அப்போது, சார் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, இது உண்மையில் நடந்த விஷயம் என்றார். இதைக்கேட்டு என் இதயமே உடைந்துவிட்டது. படத்தை பார்த்துவிட்டு அழுது அழுது எனக்கு தலைவலியே வந்துவிட்டது என சங்கீதா கண் கலங்கி பேசி உள்ளார்.

#லவ் யூ பாலா அண்ணா: மேலும், வணங்கான் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி, தனது ட்விட்டர் பக்கத்தில், வணங்கான் படத்தை கண்டு வாயடைத்து போய்விட்டேன். அருண் விஜயின் நடிப்பு அபாரம், ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். அண்ணன் பாலா மீண்டும் ஒருமுறை தான் யாரென்பதை நிரூபித்துவிட்டார், லவ் யூ பாலா அண்ணா என பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X