"அம்மா, நீங்கள் செய்த கொடுமைகளுக்கு நன்றி".. புகார் கூறிய தாய் பற்றி நடிகை சங்கீதா உருக்கமான பதிவு!

தனது சகோதரர்களின் நலனுக்காக தன்னை தனது தாய் கொடுமைப்படுத்தியதாக நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Actress Sangeetha Emotional Tweet: தாய் கொடுமைகள் பற்றி டிவிட்டரில் உருக்கமான விளக்கம்- வீடியோ

சென்னை: தனது தாய் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி டிவிட்டரில் உருக்கமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் நடிகை சங்கீதா.

தமிழில் ரசிகா என்ற பெயரில் அறிமுகமாகி, பின்னர் சங்கீதா எனப் பெயர் மாற்றிக் கொண்டவர் நடிகை சங்கீதா. பிதாமகன் அவருக்கு திறமையான நடிகை என்ற பெயரை வாங்கித் தந்தது.

தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், பாடகர் கிரீஷை திருமணம் செய்து கொண்டபின், நடிப்பதை குறைத்துக் கொண்டார். சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார்.

 தாய் புகார்

தாய் புகார்

இந்நிலையில், சங்கீதாவின் தாயார் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்று கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் அவர், சங்கீதா தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். அதனால் சங்கீதா பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.

 சங்கீதா விளக்கம்

சங்கீதா விளக்கம்

இது தொடர்பாக சங்கீதா நேரில் ஆஜராகி, மகளிர் ஆணையத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்தார். அதில் அவர், ‘சம்பந்தப்பட்ட வீடு தனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது என்றும், அதில் தனக்கு மட்டுமே முழு உரிமையுள்ளது என்றும், அந்த வீட்டை தனது தாயார் சகோதரர்களுக்கு பிடுங்கித் தர திட்டமிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

உருக்கமான டிவீட்

இது ஒருபுறம் இருக்க, தாயார் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் சங்கீதா. அந்தப் பதிவில், "பள்ளியில் இருந்து நிறுத்தி 13 வயதிலேயே வேலைக்கு அனுப்பினீர்கள், என்னிடம் பல பிளாங்க் செக்கில் கையெழுத்து வாங்கிவைத்துக்கொண்டீர்கள்.

 மகன்களின் சந்தோஷத்திற்காக...

மகன்களின் சந்தோஷத்திற்காக...

குடிக்கு அடிமையாகி வேலைக்கே போகாத உங்கள் மகன்களுக்காக என்னை சுரண்டினீர்கள். நானாக போராடி வெளியேறும் வரை திருமணம் செய்ய விடவில்லை. என் கணவரை தொல்லை செய்து என் குடும்ப அமைதியை அழித்தீர்கள்.

 பொய் புகார்

பொய் புகார்

இப்போது இப்படி ஒரு பொய் புகார் அளித்துள்ளீர்கள். அனைத்திற்கும் நன்றி. உங்களால் தான் நான் சாதாரண குழந்தையாக இருந்து தற்போது போராளியாக நிற்கிறேன்" என சங்கீதா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X