Sanghavi Net worth: அமராவதி ஹீரோயினை மறக்க முடியுமா?.. 46 வயதில் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?..

சென்னை: அமராவதி படத்தில் அறிமுகமான நடிகை சங்கவி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது குடும்பம் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே பார்ப்போம்..

அமராவதி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சங்கவி. அடுத்து கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என விஜய்யுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Actress Sanghavi celebrates her 46th birthday today, here we look out her net worth and assets

விஜய், அஜித் ஹீரோயின்: ஒரு காலத்தில் அப்படி: 90களில் டாப் ஹீரோயினாக இருந்த சங்கவி, ரஜினிகாந்த், விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜய், அஜித் உட்பட டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்துள்ள சங்கவி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக, மூடர் கூடம் நவீன் தயாரித்த கொளஞ்சி என்ற படத்தில் நடித்திருந்தார்.

நடிகை சங்கவியுடன் நடித்த நடிகைகள் எல்லோரும் திருமணம் ஆகி செட்டிலாகிவிட, சங்கவி மட்டும் பல வருடங்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்துக் கொள்வேன் என்றே கூறி வந்தார்.

Actress Sanghavi celebrates her 46th birthday today, here we look out her net worth and assets

42 வயதில் முதல் குழந்தை: அதன் பின்னர், தனது 38 வது வயதில் கடந்த 2016 ஆம் ஆண்டு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு அதிகப் படங்களில் நடிக்காத சங்கவி, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பெங்களூரில் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு தனது 42 வது வயதில் சங்கவி தனது முதல் குழந்தையைப் பெற்று எடுத்தபோது பரபரப்பாக பேசப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தைப் பிறந்தது. இரண்டு முறை அபார்ஷன் ஆனதால் தான் குழந்தை பிறக்க தாமதம் ஆனது என்கிற வலி நிறைந்த கதையையும் சொல்லி ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தார்.

சொத்து மதிப்பு: 2019க்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நடிகை சங்கவி இன்று தனது 46வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி வருகிறார். கர்நாடகாவின் மைசூரில் கணவர் வீட்டில் வாழ்ந்து வரும் நடிகை சங்கவி விஜய், அஜித் முதல் முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த நிலையில், அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை சொத்து சேமித்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X