விலையுயர்ந்த செல்போன் திருட்டு.. கவலையில் நடிகை சஞ்சனா சிங்!

சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனாவின் செல்போனை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.

Recommended Video

செல்போன் திருட்டால், என்னலாம் லீக் ஆகுமோ என்று பீதியில் நடிகை- வீடியோ

சென்னை: சென்னையில் சைக்கிளில் சென்ற நடிகை சஞ்சனா சிங்கின் விலையுயர்ந்த செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோ, ரேணிகுண்டா, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனா சிங். சென்னை முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இவர், தினமும் சைக்கிளிங் செய்வது வழக்கம்.

அந்தவகையில் நேற்று காலை தனது உடற்பயிற்சியை முடித்த சஞ்சனா, சைக்கிளிலேயே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். வழி தெரிய வேண்டும் என்பதற்காக செல்போனில் கூகுள் மேம்பை ஆன் செய்து, அதனை தனது சைக்கிளின் முன்புறத்தில் மாட்டி வைத்து பயணம் செய்துள்ளார் அவர்.

திருட்டு:

திருட்டு:

இதனை நோட்டமிட்ட பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் இருவர் தொடர்ந்து அவரைப் பின் தொடர்ந்து வந்துள்ளனர். அண்ணாநகர் சிந்தாமணி அருகே அவரது சைக்கிள் சென்றபோது, திடீரென சைக்கிளில் இருந்த செல்போனைப் பறித்து விட்டு பைக்கில் பறந்தனர்.

திருடர்கள் எஸ்கேப்:

திருடர்கள் எஸ்கேப்:

இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா, ‘திருடன், திருடன்' எனக் கூச்சலிட்டார். தனது சைக்கிளில் அவர்களைத் துரத்திச் சென்று பிடிக்கவும் முயற்சித்தார். ஆனால், திருடர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசில் புகார்:

போலீசில் புகார்:

இதுகுறித்து சஞ்சனா சிங் தரப்பில் அண்ணாநகர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டுப் போன சஞ்சனாவின் செல்போன் விலையுயர்ந்தது எனக் கூறப்படுகிறது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் எனப்படுகிறது.

சஞ்சனாவின் போட்டோக்கள்:

சஞ்சனாவின் போட்டோக்கள்:

ஆனால், செல்போனின் மதிப்பை விட அதில் உள்ள தனது வங்கித் தகவல்கள், புகைப்படங்கள், முக்கிய எண்கள் போன்றவற்றை திருடிய நபர்கள் தவறான வழியில் பயன்படுத்திவிடக் கூடாதே என்பது தான் சஞ்சனாவின் மிகப்பெரிய கவலையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X