For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டிரெடிஷனல் உடையில் செல்ஃபி.. லைக்குகளை அள்ளும் கவர்ச்சி நடிகை !

  |

  சென்னை : புடவையில் இருக்கும் தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் கவர்ச்சி புயல் சஞ்சனா.

  இந்த ஊரடங்கு சமயத்தில் ஜிம் எல்லாம் மூடி இருப்பதால் , புது உடற்பயிற்சி முறையை சொல்லி கொடுத்தவர் தான் சஞ்சனா. சமீபத்தில் அவர் வீட்டின் மொட்டை மாடியில் வாட்டர் கேன், அம்மிக்கல் , நாய்க்குட்டி போன்றவை வைத்து உடற்பயிற்சி செய்து அதனை மிகவும் வைரலாகினார்.

  எப்போதும் கவர்ச்சியில் தென்படும் இவர், பல ரசிகர்களை தன் கைக்குள் வைத்துள்ளார் . அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே காத்து இருக்கும் ரசிகர்களும் உண்டு .

  லீக்கான டி40 புகைப்படம்.. தனுஷுக்கு ஜோடி சஞ்சனா நடராஜனா?லீக்கான டி40 புகைப்படம்.. தனுஷுக்கு ஜோடி சஞ்சனா நடராஜனா?

  கவர்ச்சி பிடித்த ஒன்று

  கவர்ச்சி பிடித்த ஒன்று

  கவர்ச்சியை பெரிதும் விரும்பும் இவர், அன்றாடம் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். சினிமாவில் நடிப்பவர்களாகட்டும், சினிமாவை பார்ப்பவர்களாகட்டும் அனைவரையும் கவரக்கூடியது கவர்ச்சி தான் என்ற முடிவில் பல ஹீரோயின்ஸ் போட்டோஸ் எடுத்து தள்ளிவருகின்றனர். அதனால் பெரும்பாலும் அனைத்து நடிகைகளும் கவர்ச்சியில் இறங்கிவிட்டனர்.

  புடவையில் புது ட்ரெண்ட்

  புடவையில் புது ட்ரெண்ட்

  நடிகைகளும் குடும்பப்பாங்கான புகைப்படங்களையே கொஞ்சம் மார்டனாக மாற்றி தான் வெளியிடுகின்றனர். புடவையில் இருப்பதும் ஒரு தனி ஸ்டைலாகவே மாறி விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாடர்ன் உடைகளுக்கு மாறிவிட்டனர். பேன்ட் ஷர்ட் அணிந்து கொண்டு அதன்மேல் புடவை என்று பல வித ட்ரெண்ட் காட்டி வருகின்றனர்.

  அழகான உடலமைப்பு

  அழகான உடலமைப்பு

  பல விதமாக உடல்பயிற்சி செய்தும், யோகா செய்தும் தன்னை ஃபிட்டாக வைத்து உள்ளார் சஞ்சனா. எந்த உடையாக இருந்தாலும் தனக்கு பொருந்த வேண்டும் என்பதற்காகவே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் சஞ்சனா. கவர்ச்சியை காட்டினாலும் வசீகரிக்கும் கண்களில் அவர் அழகாகத்தான் இருக்கிறார்.

  செக்ஸ் கல்வி முக்கியம்

  செக்ஸ் கல்வி முக்கியம்

  சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் செக்ஸ் கல்வி அனைவருக்கும் வேண்டும் , அதனை பள்ளி பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அப்படி கற்பிப்பதன் மூலம் தேவை இல்லாத பல குற்றங்களை தடுக்க முடியும் என்று அவர் கூறி இருந்தார். இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பினாலும், இது போன்ற பல சர்ச்சையில் அடிக்கடி சிக்கிக் கொள்வார் சஞ்சனா.

  புடவையில் செல்ஃபி

  புடவையில் செல்ஃபி

  பெண்கள் என்ன தான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் , புடவையில் இருக்கும் ஒரு பெண் ஒரு தனி அழகு தான். அதை யாராலும் மறுக்கவே முடியாது . அதை மனதில் வைத்து புடவையில் புதிதாக தரிசனம் கொடுத்துள்ளார் நமது சஞ்சனா. அவரை புடவையில் பார்த்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர் . எனக்கு ட்ரடிஷனல் லுக் மிகவும் பிடிக்கும் என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார். இதற்கு, இந்த புடவையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றும் பல கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

  புடவையும் தாவணியும் அழகுதான்

  புடவையும் தாவணியும் அழகுதான்

  இப்போதெல்லாம் நடிகைகள் மட்டும், பல பெண்கள் புடவை அணிவதையே பெரிய விஷயமாக பேசி வருகின்றனர். எப்போதும் பேண்ட் ஷர்ட், சுடிதார் மற்றும் குர்தா என்ற உடைகளையே பெண்கள் பெரிதும் விரும்பி அணிகின்றனர். விஷேச நாட்களில் மட்டும் தான் நம் கலாச்சார உடையான புடவை , பாவாடை தாவணி அணிகின்றனர். எது எப்படியோ, நம் கலாச்சாரத்தின் அழகான விஷயமாகவே இன்னும் அவைகள் பார்க்கப்படுகின்றன என்பது பெருமையான விஷயம் தான். அந்த வகையில் சஞ்சனாவின் இந்த புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது,

  English summary
  Actress Sanjana shared a photo in the traditional dress
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X