குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ..நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட நடிகை.. வைரலாகும் வீடியோ!

சென்னை : கவர்ச்சி புயல் சஞ்சனா சிங் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஹீரோயினாக ஒருவரும், ஐட்டம் பாடலுக்கு ஒருவரும் இருந்தது எல்லாம் அந்தக்காலம் .இப்போதெல்லாம் ஒரு ஹீரோயினை வைத்து கொண்டு அனைத்து விதமான காட்சிகளையும் முடித்து விடுகிறார்கள்.

காதல் காட்சி முதல் படுக்கையறை காட்சி வரை வெட்கப்படாமல் அனைத்து காட்சிகளையும் கச்சிதமாக முடித்து கொடுக்கிறார்கள் இப்பொது இருக்கும் நடிகைகள்.

கவர்ச்சி

கவர்ச்சி

இப்போதைக்கு இருக்கும் ட்ரெண்ட்டிற்கு ஏற்றவாறு அனைத்து நடிகைகளும் கவர்ச்சியை மிகவும் விரும்புகின்றனர். ரசிகர்களும் அதிகமாக கவர்ச்சியையே விரும்புகின்றனர் என்று தெரிந்தவுடன் பல விதமான கவர்ச்சியை காட்டிவருகின்றனர். மெலோடி பாடல்களை விட குத்தாட்டத்தையே பல ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர் .

கச்சிதமான உடல்

கச்சிதமான உடல்

பல நடிகைகள் கவர்ச்சியாக நடித்தாலும் சிலருக்கு மட்டுமே கவர்ச்சி நாயகி, கவர்ச்சி புயல் போன்ற பட்டங்கள் கிடைக்கின்றன.சில நடிகைகளை கவர்ச்சிக்கென்றே பயன்படுத்துகின்றனர். ஆனால் அப்படி நடிப்பதற்கும்,பல அத்தியாவசியமான விஷயங்கள் தேவைப்படுகின்றன.அதில் கச்சிதமான உடல் மனதைரியம்,போன்றவைகள் மிகவும் தேவைப்படுகின்றன .

சலிப்பதில்லை

சலிப்பதில்லை

தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பல மணிநேரம் உடல்பயிற்சி செய்வதற்கு நடிகைகள் சலிப்பே அடைவதில்லை. அந்த வரிசையில் நடிகை சஞ்சனா சிங்கும் அடங்குவார். ஊரடங்கு சமயத்தில் கூட பல விதமான உடற்பயிற்சி செய்து அதனை தனது ரசிகர்களுக்காக தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு கொண்டு இருந்தார். அதனை பார்த்த ரசிகர்களும் சந்தோஷத்தில் இருந்தனர்.

நடுரோட்டில் குத்தாட்டம்

நடுரோட்டில் குத்தாட்டம்

சமீபத்தில் சஞ்சனாவும் , நடன இயக்குனரான ராதிகாவும் நடுரோட்டில் முருகன் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு உள்ளனர். சஞ்சனா மற்றும் ராதிகா ஆடிய இந்த ஆட்டத்தை பார்த்த இணையதளவாசிகள் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர்.

சாமிவேடம்

சாமிவேடம்

என்ன தான் கிளாமரை காட்டும் ஹீரோயின்களாக இருந்தாலும் , திடீரென்று சில படங்களில் அம்மன் வேடமிட்டு நடிப்பது ட்ரெண்டாகி விட்டது. அந்த படத்தில் கிளாமர், இந்தப்படத்தில் பக்தியா என்று மக்கள் கேள்வி எழுப்பினாலும் எல்லாம் நடிப்பு தான் என்று சிரித்துக்கொண்டே சமாளித்து விடுவதும் வழக்கமாகிவிட்டது.

புதிதல்ல

புதிதல்ல

தமிழ்சினிமாவில் பக்தி பாடலுக்கு ஆடுவதும் , கடவுள் வேடம் போட்டு நடிப்பதும் ஒன்றும் புதிதல்ல ,பல படங்களில் பலவிதமான கேரக்டர் செய்வது தான் நடிகைகளுடைய வேலை. ஆனால் ஆன்மீகவாதிகளும், கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்களும் இந்த விஷயத்தை அவ்வளவு லேசாக விடுவதில்லை. அவர்களது மனதும் ஒப்புக்கொள்வதில்லை .என்ன தான் விரதமிருந்து டான்ஸ் ஆடினாலும், அம்மன் வேடம் போட்டாலும் மக்கள் மனதில் நடிகைகள் செய்த கிளாமர் கதாபாத்திரங்கள் ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது.

சாதாரணமான ஒன்று

சாதாரணமான ஒன்று

அந்த வரிசையில் ரம்யா கிருஷ்ணன் , சவுந்தர்யா, நயன்தாரா இன்று பலரும் உள்ளனர். இப்பொழுது கவர்ச்சிக்கு மிகவும் பெயர்போன சஞ்சனா சிங் சில பல படங்களில் குத்தாட்டம் ஆடிவிட்டு அதே குத்தாட்டத்தை யாருமில்லாத சாலையில் கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செய்து பக்தி மயமாக ஆடி இருப்பது கொஞ்சம் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இவர் ஆடிய நடனத்திற்கு பல வகையாக கமெண்ட்ஸ் வந்து கொண்டு இருக்கின்றது. அட போங்க பாஸ் சஞ்சனா டான்ஸ் சூப்பர் என்றும், டான்ஸ் ஆட வேற பாட்டு கிடைக்கலையா என்றும் பலர் கேட்டு உள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் சஞ்சனா கட்டிய மஞ்சள் நிற மங்களகரமான புடவை கவர்ச்சி இல்லாமல் கட்டிய விதம் கொஞ்சம் பாராட்ட வைக்கிறது அடுத்து என்ன அப்டேட் வரும் சஞ்சனாவிடம் இருந்து இன்று ரசிகர்கள் ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X