திரிஷ்யம் 2வில் பட்டையை கிளப்பிய லாயர் ரேணுகா.. யார் தெரியுமா? இப்படி ஒரு பின்னணியா!
சென்னை: திரிஷ்யம் 2 படத்தில் ரேணுகா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை சாந்தி மாயாதேவி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமான திரிஷ்யம் 2 படம் நேற்று அமேஸான் பிரைமில் வெளியானது. இதில் மோகன் லால், மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரிஷ்யம் படம் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர்ந்து இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏறபடுத்தியது.

தியேட்டரில் பார்க்க முடியவில்லையே
ரசிகர்களின் ஏதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த படமும் வேற லெவலில் பல்வேறு திருப்பங்களுடன் செம த்ரில்லாக உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என கவலையடைந்துள்ளனர்.

பல மொழிகளில் ரீமேக்
படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருமே தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். திரிஷ்யம் 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். திரிஷ்யம் படத்தை போலவே இந்தப் படமும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்படும் என தெரிகிறது.

க்யூட் லாயர்
சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் திரிஷ்யம் 2 படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திரிஷ்யம் 2 படத்தில் ரேணுகா என்ற கதாப்பாத்திரத்தில் வக்கீலாக நடித்துள்ள சாந்தி மாயாதேவி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

இம்ப்ரஸ் செய்த சாந்தி
திரிஷ்யம் 2 படத்தில் குற்றவாளியான ஜார்ஜ்க்குட்டிக்கு ஆதரவாக அப்பியர் ஆவார் சாந்தி மாயாதேவி. லாயராக அவருடைய தைரியமான நடவடிக்கையால் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார் சாந்தி மாயாதேவி. நிஜத்திலேயேயும் சாந்தி மாயாதேவி ஒரு வக்கீல்தான் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

நிஜத்திலும் லாயர்
சாந்தி மாயாதேவியின் ஒரிஜினல் பெயர் சாந்தி பிரியா. இவரது கணவர் பெயர் ஷிஜூ ராஜசேகரன். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சாந்தி கேரள மாநிலம் நெடுமங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். பின்னர் கேரள சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

ஏசியாநெட் சேனல்
தொலைக்காட்சி சேனல்களில் ஆங்கராக பணியாற்றிய சாந்தி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அம்ரிதா டிவி, ஏசியாநெட் சேனலிலும் ஆங்கராக பணியாற்றியிருக்கிறார் சாந்தி மாயாதேவி.

ஹைகோர்ட்டில் லாயர்
தற்போது கேரளா உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் சாந்தி. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அவருடைய திறமையால் மொத்த பேரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சாந்தி மாயாதேவி முன்னதாக மம்முட்டியுடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











