Sara: நாயகியாக களமிறங்கும் சாரா.. யார் இயக்கத்தில் தெரியுமா?
சென்னை: இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா. படத்தில் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த அவர், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இளவயது பெண்ணாக நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராயின் பதின்ம வயது கேரக்டரில் இந்தப் படத்தில் சாரா நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது அழகும் கவர்ச்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன.

ஏஎல் விஜய் இயக்கத்தில் இணையும் நடிகை சாரா: நடிகை சாரா குழந்தை நட்சத்திரமாக தெய்வத் திருமகள் படத்தில் அறிமுகமானார். ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் விக்ரம், மனவளர்ச்சி குன்றிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சாராவின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிப்பை தொடராமல், படிக்க போய்விட்டார்.
அடுத்ததாக சில வருடங்கள் கழித்து மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்திலேயே சைவம் படத்தில் நடித்தார் சாரா. இந்தக் கேரக்டரும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சாரா நடித்திருந்தார். படத்தில் நந்தினியாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராயின் பதின்ம வயது கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் சாரா.

படத்தில் அவரது அழகும் இளமையும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தப் பாராட்டிற்கு அவர் படத்தில் அணிந்துவந்த காஸ்ட்யூமும் முக்கியமான காரணங்களாக அமைந்தன. இந்நிலையில், தன்னுடைய இயக்கத்தில் சாராவை நாயகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக இயக்குநர் ஏஎல் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேட்டியில், மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்துள்ளதாகவும் இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
தான் சாராவை வரும் 2025ம் ஆண்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஏஎல் விஜய் தெரிவித்துள்ளார். சாரா குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதே மிகவும் கூர்மையாக நாம் கூறுவதை கேட்டு, புரிந்துக் கொண்டு சிறப்பாக நடிப்பார். அவரது நடிப்பு இயல்பாக நம்முடைய குடும்பத்தில் சிறுமி ஒருவர் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஏஎல் விஜய் சாராவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து ஏஎல் விஜய், மணிரத்னம் என முன்னணி டைரக்டர்களின் இயக்கத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சாரா. பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்றுத் தந்துள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார் சாரா அர்ஜூன். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டுவரும் சாரா தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











