நடிகை சாரா வெங்கடேஷின் அசத்தல் போட்டோ ஷூட்.. ஹோம்லி லுக்கில் அள்ளும் அழகு.. செம க்யூட்!
சென்னை: நடிகை சாரா வெங்கடேஷ் நடத்தியுள்ள க்யூட் ஹோம்லி போட்டோ ஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகை சாரா வெங்கடேஷ். இவர்
செயின்ட் மார்க்ஸ் ரோடு என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
பகலில் ஒரு மென்பொருள் நிபுணராகவும், இரவில் ஆர்வமுள்ள நடிகராகவும் உள்ளார் சாரா வெங்கடேஷ்.

சினிமா மீது ஆர்வம்
பிரியங்கா உபேந்திராவுடன் ஸ்கிரீனை பகிர்ந்து கொள்ளவுள்ள சாரா, நடிப்பு மீதான தனது ஆர்வமே தன்னைத் திரையுலகிற்கு வந்ததற்கு காரணம் என ஏற்கனவே தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இவன்தான் உத்தமன்
தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக கூறும் சாரா, வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறினார். மேலும் செயின்ட் மார்க்ஸ் ரோடு திரைப்படம் தமிழில் இவன்தான் உத்தமன் என்ற பெயரில் வெளியாகிறது என்றும் கூறியுள்ளார்.

ட்ரெடிஷ்னல் லுக்கில்
இந்நிலையில் சாரா வெங்கடேஷ் ஹோம்லி லுக்கில் செம க்யூட்டாக போட்டோ ஷுட் நடத்தி உள்ளார். சேலை பாவாடை தாவணி என முழுக்க முழுக்க ட்ரெடிஷ்னல் உடையில் செம கலக்கலாய் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

கேரள சேலையில் க்யூட்
கழுத்து நிறைய நகை.. தலை நிறைய பூ.. கை நிறைய வளையல்.. கையில் குடை, கூடை என வெள்ளை நிற கேரள சேலையில் க்யூட்டாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

பூக்கூடையுடன் போஸ்..
பூக்களை பறிப்பதாகவும். பூக்கூடையுடன் சாலையில் அமர்ந்திருப்பதாகவும் உள்ளது அவரது போட்டோக்கள். வெள்ளை நிற சேலைக்கு கான்ட்ராக்ஸ்ட்டாக பச்சை நிற ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.

கிறங்க வைக்கும் சாரா
மேலும் பிங்க் மற்றும் புளூ காம்பினேஷனில் பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறார் சாரா. அதற்கு மேட்சான ஆபரணங்கள், கிறங்க வைக்கும் பார்வை என மிரட்டியிருக்கிறார் சாரா. சாராவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications