அழகில் ராதையை தோற்கடிக்கும் சரண்யா மோகன்..புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !
சென்னை: வெண்ணிலா கபடிக் குழு, யாரடி நீ மோகினி ஆகிய படங்களில் நடித்த சரண்யா மோகன் விதவிதமான புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சரண்யா மோகன் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
ராதா கெட்டப்பில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெகுளித்தனமான நடிப்பு
தனுஷ் நயன்தாரா நடிப்பில் சக்கைப்போடு போட்ட யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார் சரண்யா மோகன் . இந்த படத்தில் ஒரு வெகுளித்தனமாக கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் இந்த படம் பாலக்காட்டு பக்கத்துல என்ற பாடல் பெரிய அளவில் பெற்றது.

கதாநாயகியாக
2009ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழுத் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் சரண்யா மோகன். இந்த படத்தில் தான் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமானார் . கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலும் சரண்யா மோகன் அனைவருக்கும் தெரியும் முகமானார்.

விஜயின் தங்கை
விஜய்யின் தங்கையாக வேலாயுதம் திரைப்படத்தில் நடித்தார் இந்த படமும் இவருக்கு பெயர் சொல்லும்படமாக அமைந்தது. இதையடுத்து அழகர்சாமியின் குதிரை, ஈரம், ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்

லைக்குகள்
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், ராதா மேக்கப்பில் விதவிதமான போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக அனைவரிடத்திலும் லைக்குகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











