சரண்யா பொன் வண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை
சரண்யா பொன் வண்ணன், கமலஹாசனுக்கு ஜோடியாக நாயகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுக இவர். அனைத்து முன்னணி நடிகளுக்கும் அம்மாவாக நடித்து, அனைவருக்கும் பிடித்தமான அம்மாவாக உள்ளார். தற்போது சரண்யா பொண்வண்ணனின் இரண்டாவது மகள் சாந்தினிக்கு நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்துள்ளது.

நாயகன் படத்தில் அறிமுகமான சரண்யா முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்ததார். சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே, 1995ம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். பொன்வண்ணன் - சரண்யா தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

Saranya ponvannan daughter engagement
Photo Credit:

சரண்யா பொன் வண்ணன்: மகள்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து விலகி இருந்த சரண்யா, மகள் நன்கு வளர்ந்த பிறகு, ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், விஐபி, களவாணி,ஒரு கல் ஒரு கண்ணடி, நிலவுக்கு என் மேல்என்னடி கோவம் என அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.

மகளுக்கு நிச்சயதார்த்தம்: கணவன் மனைவி இருவரும் சினிமாவில் நடிகராக இருந்த போதும், தனது மகளை சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருவரையும் மருத்துவராக்கி உள்ளார். பிரியதர்ஷினி மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் சாந்தினி மகப்பேறு மருத்துவராகவும் உள்ளனர். அண்மையில் சரண்யா பொண்வண்ணனின் மூத்த மகள் பிரியதர்ஷினி MD Pediatrics பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இளைய மகள் சாந்தினிக்கும் டானினுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோவை சாந்தினி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரைப்பிரலங்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X