சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு திருமணம்.. மருத்துவரை கரம்பிடித்தார்.. தடபுடலாக நடக்கும் ரிசப்ஷன்!

சென்னை: நடிகை சரண்யா, நடிகர் பொன் வண்ணனின் இரண்டாவது மகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து, இன்று மாலை தடபுடலா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார் சரண்யா. முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த பல படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்தார். இவர் பிஸியாக நடித்து கொண்டு இருக்கும் போதே, 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு பெண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்ததால், சினிமாவில் சரண்யா தலைகாட்டவே இல்லை.

சரண்யா பொன் வண்ணன்: குடும்பத்தை கவனித்துக்கொண்டு வந்த சரண்யாவிற்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, மீண்டும் நடிக்க ஆரம்பித்த சரண்யா. ஜீவா நடிப்பில் வெளியான ராம் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், விஐபி, களவாணி, ஒரு கல் ஒரு கண்ணடி என அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

Saranya Ponvannan daughter marriage

இன்று வரவேற்பு: சரண்யா மற்றும் பொன் வண்ணணின் இளைய மகள் சாந்தினிக்கும் அண்மையில் டானி என்பவருடன் நிச்சயதார்த்தம் ஊட்டியில் தடபுடலாக நடந்தது. அந்த நிச்சயத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த போட்டோ மேக்கப் கலைஞர் மூலம் இணையத்தில் வெளியானது. இதையடுத்து, பிப்ரவரி 2ந் தேதி டான் பிலிப் பாபுவுடன் கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து, இன்று சினிமா துறையினர் மற்றும் நண்பர்களுக்காக சென்னையில் வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X