நிஜத்திலும் சூப்பர் அம்மா.. 2 மகள்களையும் டாக்டராக்கி அழகு பார்த்த சரண்யா பொன் வண்ணன்!
சென்னை: அம்மா ரோலா கூப்பிடு சரண்யாவை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவா நடித்து வருகிறார் சரண்யா பொன் வண்ணன். அனைத்து நடிகர்களும் என் மகனாக நடிக்க வேண்டும் என்று விரும்புவதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன் என்று அண்மையில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் சரண்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும், தங்களது மகளை மருத்துவராக்கி அழகு பார்த்துள்ளார்.
நடிகை சரண்யா பொன் வண்ணன், கமலஹாசனுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் நடித்திருந்தார். அவர் தமிழில் அறிமுகமான முதல் படமே அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் பாவாடை சட்டையில் அழகு பதுமையாக வந்த இவரை, தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே, 1995ம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தை பிறந்ததால் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.
சரண்யா பொன் வண்ணன்: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார் சரண்யா. அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், கிரீடம், புலி வருது, களவாணி, பாண்டி, ஒரு கல் ஒரு கண்ணடி, தென் மேற்கு பருவக்காற்று, என அடுத்தடுத்து படங்களில் அம்மாவாக நடித்தார். தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் சரண்யா பொன்வண்ணன் தான் அம்மாவாக நடித்து வருகிறார். அண்மையில் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் படத்தில் தனுஷின் அக்கா மகனுக்கும் இவர் தான் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

பொன்வண்ணன் - சரண்யா இருவருமே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிர்களாக இருந்த போதும், அவர்களை சினிமா பக்கமே காட்டாமல் 2 மகள்களையுமே மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கி உள்ளார். மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளளைய மகள் பொதுநல மருத்துவராகவும் இருக்கின்றனர். தற்போது, இரண்டாவது மகள் பட்டம் பெற்ற போது எடுத்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மையில், சரண்யாவின் மகள்கள் யூடியூப் சேனல் ஒன்றில் தனது பெற்றோர் பற்றி பேசி இருந்தனர். அதில், வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ரிக்ட், ஆனால், அப்பா எங்களிடம் ரொம்ப ஜாலியாக பேசுவார். நாங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு தான். நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், இதைத்தான் படிக்க வேண்டும் என்று அப்பா அம்மா இருவருமே சொன்னது இல்லை. நாங்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றினார்கள் என்று பேசி இருந்தனர்.


Click it and Unblock the Notifications











