10 வருட போராட்டம்.. 11 ஆபரேஷன்.. பிரைன் ட்யூமரால் அகால மரணமடைந்த இளம் நடிகை.. பிரபலங்கள் உருக்கம்!

சென்னை: புற்று நோயுடன் போராடி வந்த நடிகை சரண்யா சசியின் மரணம் மலையாள திரைத்துறையை உலுக்கியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகை சரண்யா சசி. மலையாள மொழி சினிமா மற்றும் சீரியலில் நடித்தவர். ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலமானவர் நடிகை சரண்யா சசி.

தமிழில் பச்சை என்கிற காத்து என்ற படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பிரைன் ட்யூமர் எனப்படும் மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

10 ஆண்டுகளில் மட்டும் 11 அறுவை சிகிச்சை

10 ஆண்டுகளில் மட்டும் 11 அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை செய்த போதும் மீண்டும் மீண்டும் கட்டி வந்து கொண்டிருந்தது. இதனால் அடிக்கடி அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 11 முறை சரண்யா சசிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மூளையில் ஏற்பட்ட புற்று நோய் தொடர்ந்து உடம்பில் பரவிக் கொண்டே இருந்தது.

11வது அறுவை சிகிச்சைக்கு பிறகு

11வது அறுவை சிகிச்சைக்கு பிறகு

11வது அறுவை சிகிச்சைக்கு பிறகு சரண்யா சசியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படுத்த படுக்கையாக இருந்து வந்தார் சரண்யா சசி. சரண்யா சசிக்கு அவரது தோழியான மலையாள நடிகை ஸீமா நாயர் மற்றும் மலையாள சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் உதவி செய்து வந்தனர்.

மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது

மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்று நோய் சரண்யா சசியின் தண்டுவடத்திலும் பரவியது. இதனால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. ஆனால் தண்டுவடத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்ததால் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி மரணம்

நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி மரணம்

இந்நிலையில் கடந்த மே மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சரண்யா சசி. தொடர்ந்து அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி சரண்யா சசி மரணமடைந்தார். 35 வயது நடிகையான சரண்யா சசியின் மரணம் மலையாள திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல்

சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல்

அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருடன் பணியாற்றிய பல பிரபலங்கள் அவருடைய நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கிஷோர் சத்யாவும் நடிகை சரண்யா சசி குறித்து பேசியுள்ளார்.

அவர் ஒரு உண்மையான போராளி

அவர் ஒரு உண்மையான போராளி

சரண்யா சசியின் நடிப்பில் வெளியான மந்த்ரகோடி நிகழ்ச்சியில் அவருக்கு கணவராக நடித்தவர் கிஷோர் சத்யா. சரண்யா சசி குறித்து கிஷோர் சத்யா கூறியிருப்பதாவது, அவர் ஒரு உண்மையான போராளி. மிகச் சிறிய வயதிலேயே நாள்பட்ட நோய், எந்த சாதாரண மனிதனையும் சிதைத்துவிடும். ஆனால், அவர் சோர்ந்து விடவில்லை. பல வருடங்களாக மன உறுதியுடன் போராடினார்.

என் மனைவி மீராவாக நடித்தார்

என் மனைவி மீராவாக நடித்தார்

இறுதியாக நோயைத் தோற்கடித்த வலுவான மனதின் கதைகளை நாங்கள் கேட்டிருக்கிறோம், சரண்யாவைப் பற்றியும் நான் அதைக் கேட்க விரும்பினேன். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என உருக்கமாக கூறியுள்ளார். மேலும் "மந்திரகோடி" படத்தில் கதாபாத்திரத்திற்காக நாங்கள் தேர்வு செய்த மூன்றாவது நடிகை சரண்யா. அந்த நிகழ்ச்சியில் அவர் என் மனைவி மீராவாக நடித்தார். அப்போது அவர் நடிப்பில் என்னை ஆச்சரியப்படுத்தினார்.

இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்மாதிரி

இளம் தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்மாதிரி

சரண்யா அபார ஆற்றல் கொண்ட நடிகை. பின்னர், கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு 'கருத்தமுத்து'வில் திரையில் என் மைத்துனியாக நடித்தார். அவரது நடிப்பைத் தவிர, அவரது குடும்பத்தின் மீதான பக்தி என்னை மிகவும் கவர்ந்தது. அவர் குடும்பத்தின் ஒரே பெண் என்பது பலருக்கு தெரியாது மற்றும் அவர் உடன்பிறந்தவரின் கல்வியை கவனித்துக்கொண்டார். தங்கள் குடும்பத்திற்காக தங்கள் சொந்த மகிழ்ச்சியை ஒதுக்கி வைக்கும் அர்ப்பணிப்புள்ள நபர்களைப் பார்ப்பது அரிது. இளம் தலைமுறையினருக்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரி" என்று நடிகர் கிஷோர் , நடிகை சரண்யா சசிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சீமா இல்லாமல் சரண்யா இல்லை

சீமா இல்லாமல் சரண்யா இல்லை

மேலும் நடிகர் கிஷோர், நடிகை மற்றும் சரண்யாவின் தோழி சீமா ஜி நாயர் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கடினமான காலங்களில் நடிகையை கவனித்து வந்தார்.
"சரண்யாவுக்கு ஏற்பட்ட ஆசீர்வாதங்களில் ஒன்று சீமா. அவள் முதுகெலும்பாகவும் ஆதரவாகவும் இருந்தார். சீமா இல்லாமல் சரண்யா இல்லை. சுயநலமற்ற செயல்களுக்காக சீமாவை என்னால் பாராட்ட முடியவில்லை" என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகர் கிஷோர்.

மலையாள சின்னத்திரை இரங்கல்

மலையாள சின்னத்திரை இரங்கல்

மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து உள்ளார். அவரது மறைவுக்கு மலையாள சின்னத்திரை இரங்கல் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X