சேலையிலும் செம.. அள்ளும் அழகில் பிரபல நடிகையின் ஆச்சரிய லுக்.. வாவ் என வாய்பிளக்கும் ரசிகர்கள்!
கொச்சி: பிரபல நடிகை சேலை அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.
Recommended Video
பிரபல மலையாள நடிகை சரயு மோகன். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், தீக்குளிக்கும் பச்சைமரம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சூர்யாவின் சிங்கம் 3 படத்திலும் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். சேரனின், ராஜாவுக்கு செக் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

சகுந்தலாவின் காதலன்
பி.வி.பிரசாத் இயக்கி நடித்துள்ள சகுந்தலாவின் காதலன் படத்திலும் நடித்துள்ள சரயு, பல டிவி. சிரீயல்களிலும் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வரும் நடிகை சரயு மோகன், சிறந்த கவிஞரும் கூட. நியாயராழ்சக்களே சினேகிச்ச பெண்குட்டி என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இயக்குனர் சனல் வி.தேவனை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண செய்துகொண்டார்.

ஓணம் போட்டோஸ்
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் மிகுந்த பாதுகாப்புடனுடம் எளிமையாக இந்தப் பண்டிகையை கொண்டாடினர். இதையடுத்து ஓணத்துக்காக எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்களை நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் கேரளா சென்றார். அங்கு ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரலாயின. இதையடுத்து நடிகை நவ்யா நாயர் உள்பட பல நடிகைகள் தங்களது போட்டோக்களை பதிவு செய்து ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

ஸ்பெஷல் போட்டோஷூட்
இந்நிலையில் நடிகை சரயு மோகனும் தனது புதிய ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒணத்துக்கு முன்பாக அவர் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சேலை அணிந்து, டிரெடிஷனல் லுக்கில் மிரட்டுகிறார் சரயு. அதில் சில புகைப்படங்களை, ஊஞ்சலில் ஆடுவது போன்றும் சாய்ந்திருப்பது போன்றும் கிளிக்கியுள்ளனர்.

ஓணம் வாழ்த்து
இந்த கொள்ளை அழகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார், நடிகை சரயு. அவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சேலையில் அசத்தலாக இருக்கிறீங்க. எங்க வாங்குனீங்க, இந்த சேலைகளை? என்று விசாரித்துள்ளார் ஒரு ரசிகை.

அழகான புகைப்படம்
பலர் அவர் அழகை வியந்து அப்படி பாராட்டியுள்ளனர். சிலர் அவருக்கும் ஓணம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஒருவர், அழகான புகைப்படம், இந்த புகைப்படத்தில் உங்கள் அழகு இன்னும் அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஒருவர் இந்த போட்டோ பார்த்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











